"இது ஒன்னும் கொலை குற்றமல்ல"; YouTuber இர்ஃபான் குறித்த கேள்விக்கு அமைச்சர் சொன்ன நச் பதில்!

By Ansgar R  |  First Published Nov 12, 2024, 6:56 PM IST

YouTuber Irfan : பிரபல Youtube பிரபலம் இர்ஃபான் மீது சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


தனது youtube சேனலில் மூலம் ஹோட்டல் உணவுகளை ரிவ்யூ செய்து, வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் தான் இர்பான். இன்று லோகேஷ் கனகராஜ் வரை நேரடியாக சென்று பேட்டி காணும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய பிரபலமாக அவர் வளர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய திறமையே காரணம். இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள பிரபல நடிகர் நெப்போலியனின் மிக நெருங்கிய உறவினராகவே அவர் மாறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சாதாரணமான விஷயமாக மாறிவிட்ட இந்த கால சூழலில், ஏற்கனவே தன்னுடை மனைவிக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ மூலம் அறிவித்ததற்காக அவர் மீது அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சூழலில் இர்பான்- ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4! இன்னும்10 நாட்கள் தான் இருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

இர்ஃபானுக்கு குழந்தை பிறந்த பொழுது பிரசவம் நடந்த அறுவை சிகிச்சை அறைக்குள் அந்த குழந்தையின் தந்தை என்கின்ற வகையில் இர்பானும் உள்ளே இருந்திருக்கிறார். அப்போது தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை தனது youtube சேனலிலும் அவர் வெளியிட்டு இருந்தார். அதற்கு முன்னதாகவே தன் மனைவியோடு செக்கப் மற்றும் பிற விஷயங்களுக்காக மருத்துவமனைக்கு சென்ற வீடியோக்களையும் அவர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் ஒரு அறுவை சிகிச்சை அறைக்குள் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ச்சியாக இர்பானுக்கு எதிராக கண்டன குரலை எழுப்பி வந்தனர். இந்த சூழலில் இர்பான் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனைக்கு பல கெடுபிடிகள் கொடுக்கப்பட்டது. பிரசவத்தின் போது உடன் இருந்த மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் இர்ஃபானுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நேரடியாகவே பதில் அளித்த அவர் "இர்பானுக்கு அவர் செய்த விஷயத்திற்காக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் கொலை குற்றம் அல்ல, இது பெரிய விஷயமும் அல்ல, நிச்சயம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அவர் தெளிவாக பதில் கூறியிருக்கிறார். 

சீமானை பார்த்து விஜயலட்சுமி இப்படி சொல்லிட்டாங்களே! அப்படி என்ன சொன்னாங்க பாக்குறீங்களா!

click me!