ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. எடப்பாடிக்கு ரிவிட் அடிக்க ரீ என்டரி கொடுக்கும் மருது அழகுராஜ்..!

எழுத்து பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்து கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மருது அழகுராஜின் இந்த திடீர் அறிவிப்பு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

After announcing his retirement from politics Marudhu Alaguraj is back in the OPS team

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த மருது அழகுராஜ் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் அதை விமர்சித்ததன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

After announcing his retirement from politics Marudhu Alaguraj is back in the OPS team

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் உச்சம் அடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர். இபிஎஸ் தரப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என கூறி வந்தார். அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கும் ஆஜராகி பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் தற்போது அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- அரசியலில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

After announcing his retirement from politics Marudhu Alaguraj is back in the OPS team

இதுதொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- எழுத்து பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்து கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மருது அழகுராஜின் இந்த திடீர் அறிவிப்பு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓபிஎஸ் அன்பு கட்டளையை ஏற்று மீண்டும் மருது அழகுராஜ் அதிமுகவில் ஓபிஸ் அணியில் இணைந்துள்ளார். 

After announcing his retirement from politics Marudhu Alaguraj is back in the OPS team

இதுதொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- #நாளைமுதல் களத்தில் ..அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்த என்னை அழைத்தார் அண்ணன்.. விலகளுக்கான விவரம் கேட்டார்.. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மனஉளைச்சல் உடல் சோர்வு குடும்பத்தாரின் வேதனைகள் இவற்றை கருத்தில் கொண்ட முடிவு  என்றேன்.. உங்கள் எழுத்தும் பேச்சும் தொடர வேண்டும் சகோதரன் நான் இருக்கிறேன்.. வேதனைகள் கழுத்தை நெறிப்பது வெற்றியை நாம் நெருங்குவதை கூறுகிற சகுனம் என்றார்..

 

விலகுதல் என்கிற பேச்சே இனி இருக்கக் கூடாது அயற்சியை அப்புறப்படுத்திவிட்டு முயற்சியை முன் எடுங்கள் அம்மா ஆசி உங்களுக்கு உண்டு.. என் அன்புக் கட்டளை இது என்றார். நாளைக்கு காளையார் கோவிலுக்கு அவசியம் வாங்க.. மருதிருவரை வழிபட்டு மருதுவின் மறுபிரவேசம் தொடங்கட்டும் என்றார்.. கசியும் கண்ணீரோடு ஆமோதித்தேன் எடப்பாடி ஏற்படுத்திய பிளவு ஓ.பி.எஸ் என்னும் மகத்தான மனிதரின் உன்னதத்தை உணர வைத்தது.. உயிருள்ள காலம் வரை கழகத்திற்கு உழைக்க வேண்டும் என்னும் உறுதியை குருதியில் தீர்க்கமாய் உறைய வைத்தது..

குறிப்பாக என்னை விடாமல் துரத்தி விலகல் முடிவை திரும்பப் பெறவேண்டும் என உரிமை வேண்டு கோள்களால் என்னை உருக வைத்த நட்புக்கும் உறவுக்கும் நன்றி.. நாளை முதல் களத்தில்.. மருது.. என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- நரிகள் கூடி தலையில் வைத்த நெருப்பை கிரீடம் என நம்பும் இபிஎஸ்..! திருந்துவதும்,வருந்துவதும் நல்லதாகும்- மருது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios
budget 2025