நரிகள் கூடி தலையில் வைத்த நெருப்பை கிரீடம் என நம்பும் இபிஎஸ்..! திருந்துவதும்,வருந்துவதும் நல்லதாகும்- மருது
எடப்பாடியின் ஏலக்கடையில் சிக்கியிருக்கும், மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரிடமும் ஒரு கொள்கையற்ற கொள்முதல் மட்டுமே நடக்கிறது என்பதை, மக்களுக்கும் குறிப்பாக கழகத்தின் கள்ளம் கபடமில்லா தொண்டர்களுக்கும் உணர்த்துவதற்குமான வாய்ப்பாக நீதி மன்ற உத்தரவு அமைந்துள்ளதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்
பணம் இருந்தால் தலைவன்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களை ஒன்றன் பின் ஒன்றாக நீக்கி வருகிறார். இந்தநிலையில் அதிமுகபொதுச்செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசரம் என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தன்னை தலைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்கும் இடிஅமீன் எடப்பாடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவரது உச்சந்தலையில் அடிக்கப்பட்ட சுத்தியல் அடியாகவே பார்க்கப்படுகிறது. காரணம் நியாய தர்மத்தை அ.தி.மு.க வில் உள்ள ஒருவருக்கும் யோசித்துப் பார்க்க கூட தருணம் தந்து விடக்கூடாது என்னும் எடப்பாடியின் அதிகார அவசர வெறியை ஐம்பது நாட்கள் மாட்சிமை மிக்க நீதிமன்ற ஆறப்போட்டிருப்பதன் மூலம் அது எடப்பாடியின் பித்துப் பிடித்த அபகரிப்பு வியாதிக்கான வைத்தியமாகவே பார்க்க ப்படுகிறது.
பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்
போலியாக திரட்டப்படும் கூட்டம்
தான் செய்யும் ஜனநாயகத்திற்கு புறம்பான அரசியல் அபகரிப்பை எதிர்க்கும் எல்லோரையும் நீக்கிவிட்டு அண்ணா திமுக.வை தனது முறைகேட்டு பணத்திலான முதலீட்டு சொத்தாக்க முயற்சிக்கிப்பதையும். அனைத்துக்கும் விலை வைத்து வலைவீசும் எடப்பாடியின் ஏலக்கடையில் சிக்கியிருக்கும், மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரிடமும் ஒரு கொள்கையற்ற கொள்முதல் மட்டுமே நடக்கிறது என்பதை, மக்களுக்கும் குறிப்பாக கழகத்தின் கள்ளம் கபடமில்லா தொண்டர்களுக்கும் உணர்த்துவதற்குமான வாய்ப்பாக நீதி மன்ற உத்தரவு அமைந்துள்ளது. பதவிக்கும் பணத்துக்கும் தன்னை விற்பனை செய்து கொள்ளும் சுயநலமிகளும். பொருளாதாரத்தை கொண்டு போலியாக திரட்டப்படும் கூட்டத்தின் பக்கம் தலையை காட்டுவதே தங்களுக்கு அரசியல் ஆதாயம் தரும் என நம்பும் முதுகெலும்பு இல்லாதவர்களால்
சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஸ்க்கு எந்த வரிசையில் இடம்..? சபாநாயகர் அப்பாவுவின் புதிய தகவல்
இபிஎஸ் திருந்த வேண்டும்
எடப்பாடிக்கு ஒரு தற்காலிக சுகத்தை மட்டும் தான் தரமுடியும் என்பதோடு மிக விரைவில் எடப்பாடியின் முறை கெட்ட செயல்கள் அனைத்தும் நிரந்தரமாக முறியடிக்கப்படும் என்பதற்கான தொடக்கமே தீர்ப்பாகும். எனவே நரிகள் சில கூடி எடப்பாடி தலையில் வைத்திருக்கும் நெருப்பை கிரீடம் என இனியும் நம்பி அவர் மோசம் போவதை விட்டு விட்டு திருந்துவதும் வருந்துவதும் நல்லதாகும். அதற்கான வாய்ப்பாக இந்த இடைவேளை காலத்தை இடையூறு எடப்பாடி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்