MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் திமுக, அதிமுக கூட்டணிக்கு நான் பேச்சுவார்த்தை நடத்தியதாக பரவும் செய்தி உண்மை இல்லையென நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.a

2 Min read
Author : Velmurugan s
Published : May 17 2026, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்..
Image Credit : Asianet News

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்..

அண்மையில் வெளியான சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை சமூக வலைதளங்களில் பெரும் பூதாகரமாகக் கிளம்பியது. ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காத நிலையில் திமுக, அதிமுக கூட்டணி தொடர்பாக ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டது. இது பெரும் வைரலான நிலையில் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஸ்டாலினை சந்தித்தது ஏன்..?
Image Credit : Asianet News

ஸ்டாலினை சந்தித்தது ஏன்..?

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “மு.க.ஸ்டாலினும், நானும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால நண்பர்கள். இருவரிடையேயான உறவு அரசியல், சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது. அரசியலில் வெற்றி, தோல்விகள் இயல்பு தான் என்றாலும், ஸ்டாலினின் தோல்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அதனை அவருடன் பகிர்ந்து கொள்வதற்காக தான் அவரை சந்தித்தேன்.

35
நான் தரங்கெட்டவன் கிடையாது
Image Credit : Asianet News

நான் தரங்கெட்டவன் கிடையாது

விஜய் முதல்வராவதைத் தடுக்கும் அளவுக்கு தரங்கெட்டவன் நான் கிடையாது. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார். அவர் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக, அதிமுக என இருப்பெரும் கட்சிகளை வீழ்த்தி தனி நபராக விஜய் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

45
அரசியலில் 100% வெற்றி பெற்றிருப்பேன்
Image Credit : X

அரசியலில் 100% வெற்றி பெற்றிருப்பேன்

நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன். அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் அரசியல் என்பது எளிதானதல்ல. 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகளைப் பார்த்த மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது.

55
தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
Image Credit : X

தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை

புதிதாக ஆட்சி அமைத்துள்ள விஜய் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். அவர் நல்லது செய்வாரென நான் நினைக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விஜய்யின் ரசிகர்கள், தொண்டர்கள் மிகுந்த எச்சரக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய தவறு உங்கள் தலைமையை தான் பாதிக்கும் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் மீது பொறாமையா..? ஒருவேளை கமல் CM ஆகியிருந்தா..?

நான் அரசியலை விட்டே முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டேன். அப்படி இருக்கையில் விஜய் முதல்வராவதில் எனக்கு எப்படி பொறாமை இருக்கும்..? விஜய்க்கும் எனக்கும் கிட்டத்தட்ட 25 வருட இடைவேளை, கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கான கேப் அது. ஒருவேளை கமல் முதல்வராகியிருந்தால் கூட பொறாமை உண்டாகியிருக்குமோ..? அப்பொழுது கூட நான் அப்படி நினைக்க மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணமான மகள்களுக்கும் தாயின் சொத்தில் சம பங்கு உண்டா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம்!
Recommended image2
Now Playing
திருச்சியில் தமிழகத்தின் முதல் 'டர்ட் கார்ட்டிங்' ரேஸ்டிராக் திறப்பு!
Recommended image3
TN Govt Loan: தமிழக அரசு மூலம் குறைந்த வட்டியில் கடன்.! யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Related Stories
Recommended image1
ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
Recommended image2
TVK Cabinet Ministers List: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved