சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஸ்க்கு எந்த வரிசையில் இடம்..? சபாநாயகர் அப்பாவுவின் புதிய தகவல்

சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர், துணை தலைவர், அவர்களுக்கு என்ன பதவி, இந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் முழு உரிமை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Speaker Appavu information regarding seat allocation for OPS EPS in the Assembly

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்யை நீக்க ஆர்.பி.உதயகுமாரை நியமித்தார். இது தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் இபிஎஸ் ஆதரவாளர்கள் வழங்கினார்கள் மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோரை நீக்கியுள்ளதாகவும் எனவே அவர்களை அதிமுக உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ள கூடாது என தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில்  இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் சட்டசபை சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் எதிர்கட்சி துணை தலைவர் பதவி மற்றும் இருக்கை ஒதுக்கீடு குறித்து எந்தவித முடிவும் எடுக்க கூடாது என தெரிவித்து இருந்தார்.

பெண்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் பொன்முடி..! அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்- இறங்கி அடிக்கும் பாஜக

Speaker Appavu information regarding seat allocation for OPS EPS in the Assembly

சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு..?

சட்டபேரவை கூட்டம் இந்த மாத மத்தியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் சட்ட மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடு சட்டசபை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு அதிமுக பிரச்சனை தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றுள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் மற்றொரு தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வருகிறது. இதையும் தாண்டி தேர்தல் ஆணையம் உள்ளது. அரசியில் கட்சிகளுக்கு முடிவு சொல்லக்கூடியது இடம். சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர், துணை தலைவர், அவர்களுக்கு என்ன பதவி, இந்த இடத்தில் இருக்கை ஒதுக்குவது என்பது சபாநாயகரின் முழு உரிமை . சட்டசபை நடைபெறும் போது பாருங்க எல்லாமும் சரியாகவே நடக்கும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

பொய் வழக்கினால் பெண் தற்கொலை..! திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும்- அண்ணாமலை ஆவேசம்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios