Asianet News TamilAsianet News Tamil

பெண்களை தொடர்ந்து அவமானப்படுத்தும் பொன்முடி..! அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்- இறங்கி அடிக்கும் பாஜக

 தமிழ் பெண்களை தொடர்நது அவமதித்து,  அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.

BJP has demanded that Ponmudi should be removed from the ministerial post for insulting women
Author
First Published Oct 3, 2022, 8:14 AM IST

கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்  கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர், எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடைபெறும் பணிகள் குறித்து என்னிடம் எதுவும் சொல்வதில்லை. இதுக்குறித்து பி.டி.ஓ-விடம் கூறினாலும் அதற்கு முறையான பதில் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார். 

பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் பொன்முடி.. கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு... நடந்தது என்ன?

BJP has demanded that Ponmudi should be removed from the ministerial post for insulting women

அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்

இதனைத் தொடர்ந்து, அவரை அமரச் சொன்ன அமைச்சர் பொன்முடி,  ஓ அப்டியா நீ. அதனால தான் பேசுற. உக்காரு என்று ஒருமையில் பேசினார். மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் உங்கள் பிரச்சனைகளை தனியாக பேசிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவரை நீங்கள் எஸ்சி தானே என பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலே கூப்பிட்டு பேசியதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து  பெண்களை ஓசி பயணம் என பேசிய சர்ச்சை முடியாத நிலையில் அடுத்த சர்ச்சையில் பொன்முடி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

BJP has demanded that Ponmudi should be removed from the ministerial post for insulting women

இந்தநிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வீரபாண்டி கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர்  பொன்முடி, ஒன்றிய கவுன்சிலர் பெண்மணி ஒருவரை ஒருமையில் பேசியதோடு, உனக்கும், ஊராட்சி தலைவருக்கும் உள்ள பிரச்சினையை தனியாக பேசிக்கிங்க என்று சொல்லியதோடு,  அப்படியா நீ? ஏய்! என்றெல்லாம் ஆணவத்தோடு, அவமரியாதையாக பேசியது  வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்க

ஏற்கனவே, பெண்களை பஸ்ஸில் "ஓசி, ஓசியில் போறீங்க" என்று கேவலப்படுத்திய நிலையில், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஒன்றிய கவுன்சிலரை அவதூறாக,ஆதிக்க மனப்பான்மையோடு  பேசியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பொன்முடி அவர்கள் தமிழ் பெண்களை தொடர்நது அவமதித்து,  அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக இணை பொதுச்செயலாளர் பதவியை ஓபிஎஸ்-க்கு வழங்க முன்வந்த இபிஎஸ்? வெளியான பரபரப்பு தகவல்..!
 

Follow Us:
Download App:
  • android
  • ios