Asianet News TamilAsianet News Tamil

பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் பொன்முடி.. கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு... நடந்தது என்ன?

கிராமசபை கூட்டத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலரை ஒருமையில் பேசியதோடு அங்கு எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

minister ponmudi left grama sabai kootam at vilupuram
Author
First Published Oct 2, 2022, 7:13 PM IST

கிராமசபை கூட்டத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலரை ஒருமையில் பேசியதோடு அங்கு எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை நிர்வாக துறை அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எடப்பாடி ஒரு தொடை நடுங்கி - டிடிவி தினகரன் அதிரடி

இதை அடுத்து அமைச்சர் கேட்கும் போது, கழிவு நீர் கால்வாய், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து, உங்கள் கேள்விகளுக்கு இங்கு வந்துள்ள அரசு அலுவலர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் என்று கூறிய அமைச்சர் பொன்முடி அங்கிருந்து கிளம்பினார். இதற்கு முன்னதாக அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர், எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா?

இதையும் படிங்க: மகாத்மா காந்தி 154 வது பிறந்தநாள்.. காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்..

ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடைபெறும் பணிகள் குறித்து என்னிடம் எதுவும் சொல்வதில்லை. இதுக்குறித்து பி.டி.ஓ-விடம் கூறினாலும் அதற்கு முறையான பதில் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை அமரச் சொன்ன அமைச்சர் பொன்முடி, ஓ அப்டியா நீ. அதனால தான் பேசுற. உக்காரு என்று ஒருமையில் பேசினார். மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் உங்கள் பிரச்சனைகளை தனியாக பேசிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios