Asianet News TamilAsianet News Tamil

அரசியலில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் உச்சம் அடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார்.

Marudhu Alaguraj sudden announcement of his retirement from politics
Author
First Published Oct 22, 2022, 6:39 AM IST

நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளருமான மருது அழகுராஜ் அரசியலிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்து தொண்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம் சென்றதை அடுத்து அவர் அதை விமர்சித்ததன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், ஓபிஎஸ்- இபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையும் படிங்க;- ஜெயக்குமார் போல் சந்து முனையில் சிந்து பாட தெரியாது..! இறங்கி அடித்த மருது அழகுராஜ்

Marudhu Alaguraj sudden announcement of his retirement from politics

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான மோதல் உச்சம் அடைந்த நிலையில், நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர். இபிஎஸ் தரப்புக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். குறிப்பாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வார் என கூறி வந்தார்.  அதேபோல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கும் ஆஜராகி பல்வேறு ரகசிய தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் தற்போது அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  புழலுக்கு எடப்பாடியும், புனித ஜார்ஜ் கோட்டையில் OPSம் செல்லும் காலம் வரும்! மாஸ் காட்டும் மருது அழகுராஜ்.!

Marudhu Alaguraj sudden announcement of his retirement from politics

இதுதொடர்பாக மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- எழுத்து பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்து கொள்கிறேன். இது காலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார். மருது அழகுராஜின் இந்தத திடீர் அறிவிப்பு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios