எல்லை தாண்டியதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

கச்ச தீவுக்கும் நெடுஞ்தீவுக்கும் இடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 
 

7 Rameswaram fishermen arrested by Sri Lankan Navy for crossing the border

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுஞ்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி உள்ளனர்.

மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து..! இறந்த முபினின் உறவினர் அப்ஸர் கானை அதிரடியாக கைது செய்த போலீஸ்

அப்போது மிக்கேல்ராஜ் என்பவரது விசைபடகை சிறைபிடித்த அதிகாரிகள், அதில் இருந்த  கிளிண்டன், பேதுரு, வினிஸ்டன், தயான், தானி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களை சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைபடகையும் இலங்கை படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க:வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் மீனவர்கள் மற்றும் விசைபடகை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios