தமிழக மீனவர்கள் 9 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!!

இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

tn fishermans arrested by srilanka police

இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர் கைது சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை தொடர்ந்து தான் வருகிறது. அந்த வகையில் தற்போதும், அதே போல, நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.

இதையும் படிங்க: ஆக.13ல் சர்வதேச காற்றாடி திருவிழா… மீண்டும் களைகட்ட தொடங்கிய மாமல்லபுரம்!!

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும்,  திரிகோணமலை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் , முல்லைத்தீவு போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், எரிபொருட்கள் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 3 மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர். இதனால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 44வது செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்தியுள்ளது… பிரதமர் மோடி பாராட்டு!!

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இழுவைப் படகுகள் மூலம் தொடர்ச்சியாக மீன்பிடித்து வருகின்றனர். இதனால் ஈழத் தமிழ் மீனவர்களது மீன்வளம் சுரண்டப்படுகிறது. இலங்கை கடற்படையினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் தற்போது 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்தாக வழக்கு பதிவு செய்து நாளை நீதிமன்றத்தி ஆஜர்படுத்த உள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios