Asianet News TamilAsianet News Tamil

ஆக.13ல் சர்வதேச காற்றாடி திருவிழா… மீண்டும் களைகட்ட தொடங்கிய மாமல்லபுரம்!!

வரும் 13 ஆம் தேதி சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. 

international kite festival from august 13th at mamallapuram
Author
Mamallapuram, First Published Aug 10, 2022, 10:54 PM IST

வரும் 13 ஆம் தேதி சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்திருந்தது. மேலும் செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளது தமிழக அரசு. உலகம் முழுவதும் 186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அவரவர் நாட்டு உணவுகளை சமைத்து கொடுத்து சிறப்பாக உபசரித்து, சர்வதேசத்தையே தமிழக அரசு வியக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

international kite festival from august 13th at mamallapuram

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நடத்தப்பட உள்ளது. வரும் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த காற்றாடி திருவிழா, 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைப்பெற உள்ளது. வழக்கமாக, காற்றாடி திருவிழா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலேயே நடத்தப்பட்டு வந்தது. செஸ் ஒலிம்பியாட்டியை வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தியதால், தற்போது முதல்முறையாக சர்வதேச காற்றாடி திருவிழாவும் தமிழகத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: 44வது செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்தியுள்ளது… பிரதமர் மோடி பாராட்டு!!

international kite festival from august 13th at mamallapuram

சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் மகாபலிபுரத்தில் உள்ள டிடிடிசி ஓஷன் வியூவில் நடைபெறும் இந்த பிரமாண்ட காற்றாடி திருவிழாவில், அமெரிக்கா, தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் குழுக்கள் பங்கேற்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், பட்டம் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாமல்லபுரம் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios