44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்திருந்தது. மேலும் செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளது தமிழக அரசு. உலகம் முழுவதும் 186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அவரவர் நாட்டு உணவுகளை சமைத்து கொடுத்து சிறப்பாக உபசரித்து, சர்வதேசத்தையே தமிழக அரசு வியக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தமிழக அரசின் ஏற்பாடுகளையும், உபசரிப்பையும் மெச்சினர். உலகமே தமிழகத்தை வியந்து பார்த்தது. இந்த நிலையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள் என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணியினர் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டனர். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணி (ஆண்கள்) மற்றும் இந்தியா ஏ அணி (பெண்கள்) ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் செஸ் எதிர்காலத்திற்கு இது நல்லது என்று தெரிவித்திருந்தார்.
