சென்னை சென்டர் மீடியன் மின் கம்பத்தில் ஷாக்.. தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த ஐடி ஊழியர்.!

சென்னை பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் வசித்து வந்தவர் இளவரசன் (33). இவர் நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக நண்பர் ஒரு வருடன் மடிப்பாக்கம் கைவேலி சிக்னல் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு சாலை நடுவே இருந்த மின்கம்பத்தில் இருந்த மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது. 

IT employee died in center median electrocution in chennai

சென்னையில் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி ஐ.டி. ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் வசித்து வந்தவர் இளவரசன் (33). இவர் நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக நண்பர் ஒரு வருடன் மடிப்பாக்கம் கைவேலி சிக்னல் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு சாலை நடுவே இருந்த மின்கம்பத்தில் இருந்த மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது. முதலில் சாலையின் நடுவில் சென்டர் மீடியனில் உள்ள மின் கம்பத்தின் இடைவெளி வழியாக முதலில் அவரது நண்பர் மின்கம்பத்தை தொடாமல் சென்றுவிட்டார். 

இதையும் படிங்க;- மக்களே !! மழை காலங்களில் இதை செய்யாதீர்கள்.. மின் வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை..

IT employee died in center median electrocution in chennai

அடுத்து இளவசரன் அந்த மின்கம்பத்தை தொட்டவாறு மின் வயரில் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் இளவரசன் தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இளவரசனை பரிசோதனை செய்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

IT employee died in center median electrocution in chennai

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்சாரம் தாக்கப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இளவரசன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  மழைநீர் வடிகாலில் விழுந்து இளைஞர் பலி.! தடுப்புகள் அமைக்கவில்லையென்றால் அபராதம்.! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios