Published : Jul 12, 2022, 07:08 AM ISTUpdated : Jul 12, 2022, 10:49 PM IST

Tamil News Highlights: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா... பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து!!

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று தெரிவித்துள்ளார். 

Tamil News Highlights:  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா... பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து!!

10:49 PM (IST) Jul 12

ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?

முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த 16 பிரபலங்களின் ராசி என்ன என்பதை பார்ப்போம். மேலும் பார்க்க... 
 

10:48 PM (IST) Jul 12

துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!

தற்போதைய இளம் நடிகைகளுக்கு அழகிலும், கவர்ச்சியிலும் செம்ம டஃப் கொடுத்து வரும் நடிகை திவ்ய பாரதி துளியும் மேக்கப் இன்றி, சேலையில் வெளியிட்டுள்ள டல் லைட் போட்டோஸ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க... 

10:39 PM (IST) Jul 12

குட்டி டாப்..கிழிந்த ஜீன் பாவாடையில் தொடை அழகை காட்டியபடி கிக் ஏற்றும் டாப்சி பன்னு..

முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான சபாஷ் மிதுவுக்கும்  தயாராகி விட்டார்.

மேலும் படிக்க...குட்டி டாப்..கிழிந்த ஜீன் பாவாடையில் தொடை அழகை காட்டியபடி கிக் ஏற்றும் டாப்சி பன்னு..

09:55 PM (IST) Jul 12

நான்காவது முறையாக உதயநிதியுடன் கைகோர்க்கும் சந்தானம்..நாளை வெளியாகும் டீசர்!

முன்னதாக  உதயநிதி - சந்தானம் இருவரும் ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலன் காதல், நண்பேண்டா உள்ளிட்ட மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் படிக்க.. நான்காவது முறையாக உதயநிதியுடன் கைகோர்க்கும் சந்தானம்..நாளை வெளியாகும் டீசர்!

09:07 PM (IST) Jul 12

சோழர் புலியாக விக்ரம்..டீசரில் மிஸ்ஸான காட்சிகளை நாளை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!

அருள்மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழனாக  ஜெயம் ரவி நடித்துள்ளார். இவர்தான் கதையின் நாயகனும் கூட .  இவரின் அண்ணனாக இருப்பதால் விக்ரமிற்கு மிக முக்கிய பங்கு இந்த படத்தில் உண்டு என்பது தெரிகிறது.

மேலும் படிக்க...சோழர் புலியாக விக்ரம்..டீசரில் மிஸ்ஸான காட்சிகளை நாளை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம்!

08:22 PM (IST) Jul 12

விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!

பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமான இதில் மூத்த இசையமைப்பாளர்கள் மூவரும் வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் பைஜாமா ஜிப்பா அணிந்துள்ளார்.

மேலும் படிக்க..விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!

07:24 PM (IST) Jul 12

"நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!

இந்நிலைகள் ஓய்வு பெற்ற கேரள முன்னால் காவல்துறை அதிகாரி ஸ்ரீலேகா என்பவர் தனது youtube சேனலில் திலீப் மீதான குற்றச்சாற்று 100% தவறானது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க..."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!

07:15 PM (IST) Jul 12

ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்... வருமான வரிச்சோதனையில் அதிர்ச்சி தகவல்!!

கோவை தொழிலதிபர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொழிலதிபரான வடவள்ளி சந்திரசேகர் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளர். இவரது மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலர். மேலும் இவர் எடப்பாடியின் நெருங்கிய உறவினரும் கூட. அதுமட்டுமின்றி வேலுமணியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 

06:39 PM (IST) Jul 12

முதல்வர் குணமடைய அண்ணாமலை வாழ்த்து

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குணமடைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து முதல்வர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

06:33 PM (IST) Jul 12

வருமான வரித்துறை சோதனையில் 500 கோடி கண்டுபிடிப்பு

வருமான வரித்துறையினர் ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு.

05:33 PM (IST) Jul 12

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார். 

05:32 PM (IST) Jul 12

"வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!

"வேஷ்டிக்கு முடிவில்லை" என பதிவிட்டுள்ள மாளவிகா காலில் மெட்டியும், கையில் குளிர்பான கிளாசுமாய் தொப்புளை காட்டியபடி கிக் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க.."வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!

05:11 PM (IST) Jul 12

வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!

நேற்று வெளியிடப்பட்ட பாடல்கள் இன்று ரசிகர்களுக்காக ஆடியோவாக வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இசை புயலின் மேஜிக் எனக் குறிப்பிட்டு ஆல்பத்திற்கான லிங்கை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க...வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!

05:03 PM (IST) Jul 12

5. நாடார் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் வெட்டிப் படுகொலை.. 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் சரவணகுமார் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

04:34 PM (IST) Jul 12

Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!

Thala Ajith Kumar goes to Paris Eiffel Tower video goes viral on social media : பாரிஸ் தெருக்களில் அஜித் குமார் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏகே 61 படத்தின் ஸ்டைலில் இருக்கும் அஜித் சகாக்களுடன் தெருக்களில் ஸ்டைலாக நடந்து செல்லும் வீடியோ தான் அது.

மேலும் படிக்க.. Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!

04:10 PM (IST) Jul 12

மதுரை விமானநிலையத்தில் திடீரென வெடித்த துப்பாக்கி..! அலறி அடித்து ஓடிய பயணிகள்

மதுரை விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

மேலும் படிக்க..

03:41 PM (IST) Jul 12

உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!

நடிகை பூஜா ஹெக்டே ட்ரான்ஸ்பரெண்டான கவர்ச்சி உடையில், ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் பார்க்க...

03:27 PM (IST) Jul 12

கொடநாடு கொலை வழக்கு..! முன்னாள் எம்,எல்.ஏவிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியிடம் கோவையில்  தனிப்படை போலீசார் மீண்டும் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க..

03:24 PM (IST) Jul 12

வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று

வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.

மேலும் படிக்க..வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று

02:41 PM (IST) Jul 12

அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

இந்த வருடம் வரிசை கட்டியது  என்பது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.   வலிமை, வாரிசு, வெந்து தணிந்தது காடு, வாடிவாசல், விக்ரம்  தற்போது வணங்கான் என V வரிசை படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும் படிக்க... அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

02:39 PM (IST) Jul 12

மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!

நடிகர் அஜித் கடந்த சில தினங்களாக குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், நண்பர்கள் சிலருடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் படிக்க... 

02:28 PM (IST) Jul 12

உயர் கல்வித்துறையிடம் ஆலோசனை நடத்தாத ஆளுநர்..! பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறார்- பொன்முடி ஆவேசம்

மரபு முறைகளை  பின்பற்றாமல் நடத்த உள்ள மதுரை  காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

01:59 PM (IST) Jul 12

அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது.. சசிகலா

அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான். அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லாது. நான் இருக்கிற வரையில் அதிமுகவை அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது. ஒரு சிலருடைய தனிப்பட்ட தேவைகளால், அப்பாவி தொண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என சசிகலா தெரிவித்துள்ளார்.

01:54 PM (IST) Jul 12

சென்னை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.27 கோடி பணம் பறிமுதல்

சென்னை, அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.27 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 

01:53 PM (IST) Jul 12

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலை புகுத்துகிறார்.. அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலைப் புகுத்துகிறார். மாணவர்களிடம் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார் என சந்தேகம். ஆளுநரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரசாரமாக உள்ளது என அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். 

01:43 PM (IST) Jul 12

ஜெ.வின் மகளே பொறுத்தது போதும்..! அரசியலுக்கு வாங்க...பிரபாவை சந்தித்து கோரிக்கை வைத்தவர்கள் யார் தெரியுமா?

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறும் ஜெயலட்சுமி என்ற பிரபாவை  மண்ணின் மைந்தர்கள் கழகம் சந்தித்து அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

01:17 PM (IST) Jul 12

கணவரை விவாகரத்து செய்தது ஏன்? - இசைவாணி விளக்கம்

கானா பாடல் பாட எனது வீட்டில் இருந்த ஆதரவு, எனது கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. கானா தான் எனக்கு உயிர், அதற்கு கணவர் வீட்டில் அனுமதி கொடுக்காததால், அவரை விட்டு பிரிந்துவிட்டேன். இப்போ அவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் பண்ணிக்கிட்டார். எனக்கும், அவரது குடும்பத்துக்கும் தற்போது எந்தவிதமான தொடர்பும் இல்லை என கூறியுள்ளார் இசைவாணி.மேலும் படிக்க

01:15 PM (IST) Jul 12

44 வயதில் கல்லூரி மாணவியா.. இந்து கடவுள்களை அவமானப்படுத்த கனடா பயணம்.. லீனா மணிமேகலை மீது புகார்.

இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எதிராக பத்திரிக்கையாளர் வாராகி , உள்துறை செயாளார், தாம்பரம் காவல் ஆணையாளர், சேலையூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க

01:00 PM (IST) Jul 12

இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

பிரபல இயக்குனர் அமீரின் தாயார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க...
 

12:25 PM (IST) Jul 12

நானே அதிமுக பொருளாளர்... வங்கிகளுக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்

அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், நானே அதிமுக பொருளாளர். வேறு யாரையும் அதிமுக வரவு, செலவுகளை கையாள அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:09 PM (IST) Jul 12

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆறுக்குட்டி, அவருடைய மகனிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

11:39 AM (IST) Jul 12

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ் தரப்பில் முறையீடு

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை வைத்த சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

11:37 AM (IST) Jul 12

குடியரசுத் தலைவர் தேர்தல்.. பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவு?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முர்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

11:21 AM (IST) Jul 12

உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு மனைவி, மகளை உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவி மற்றும் மகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:20 AM (IST) Jul 12

யாராயிருந்தாலும் வெட்டுங்கள்..! அடித்து உதையுங்கள்..! மைக்கில் பேசிய ஓபிஎஸ்- மாவட்ட செயலாளர் புகார்

அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை  கொள்ளை அடித்து சென்ற பொருட்களை திரும்ப பெற்றுத்தருமாறு அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜராம் புகார் அளித்துள்ளார்

மேலும் படிக்க..

11:06 AM (IST) Jul 12

பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி..!

'அவன் இவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்த, நடிகர் ராம்ராஜ் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...

10:49 AM (IST) Jul 12

லீனா மணிமேகலையை விடாது கருப்பாய் துரத்தும் காளி பட போஸ்டர் சர்ச்சை

லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ராஜ் கவுரவ், இந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாதிட்டார். இதையடுத்து இயக்குனர் லீனா மணிமேகலையும், காளி பட தயாரிப்பாளரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.மேலும் படிக்க

09:34 AM (IST) Jul 12

காவரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

09:32 AM (IST) Jul 12

தனியார் கல்லூரி அலுவலக உதவியாளர் சுப்பிரமணி அடித்து கொலை

திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையில் தனியார் கல்லூரி அலுவலக உதவியாளர் சுப்பிரமணி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் இளைஞர்கள் அவரை அடித்து கொன்றனர்.

09:31 AM (IST) Jul 12

குடியரசுதத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை வருகிறது

ஜூலை 18ல் நடக்கவிருக்கும் குடியரசுதத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது. டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.