அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மூடி கிடந்த திரையரங்குகள் தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் காத்திருப்பில் இருந்த படங்கள் குறித்த அப்டேட்டுக்கள் அடுத்து வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து முன்னணி நாயகர்களின் படங்கள் அஜித், விஜய், கார்த்தி, கமல், சூர்யா தனுஷ் என டாப் நாயகர்களின் படங்கள் வரிசையாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வருடம் வரிசை கட்டியது என்பது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம். வலிமை, வாரிசு, வெந்து தணிந்தது காடு, வாடிவாசல், விக்ரம் தற்போது வணங்கான் என V வரிசை படங்கள் பட்டையை கிளப்பி வருகிறது.
valimai
வலிமை :
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் போனிகபூர் கூட்டணியில் உருவான அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியானது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான இந்த படத்தில் ஹீமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தார்.விமர்சன ரீதியில் மிதமான வரவேற்புகளை பெற்றிருந்தாலும் இந்த படம் 234 கோடி வசூலை பெற்றது. இதன் பட்ஜெட் 150 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
varisu
வாரிசு :
பீஸ்ட் படத்தை முடித்த கையோடு டோலிவுட் இயக்குனருடன் கமிட் ஆகிவிட்டார் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு என்னும் படம் உருவாகி வருகிறது. வம்சி பைடிப்பள்ளி இயக்கம் வாரிசு படத்தின் மூலம் விஜய் நேரடியாக தெலுங்கு மொழி படத்திற்கு அறிமுகம் ஆகிறார். இதில் புஷ்பா பட நாயகி ராஸ்மீக மந்திர நாயகி ரஷ்மிக்கா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...சூர்யா - சாய் பல்லவி கூட்டணியில் வெளியாகும் ‘கார்கி’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Vanangaan
வணங்கான் :
பாலா கூட்டணியில்தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் 41 வது படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் பிளாக் பாஸ்டர் படங்களாக அமைந்தன. இந்த வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
vaadivaasal
வாடிவாசல் :
இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா கூட்டணிகள் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படம் குறித்தான எதிர்பார்ப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படப்பிடிப்பு இன்னும் தளத்திற்கு வரவில்லை. இதற்கு இடையே சூர்யா ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், வணங்கான் என அடுத்தடுத்த படங்களை கமிட்டாகிவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
இதனால் வாடிவாசல் தள்ளிப் போனது என கூறப்பட்டது. அதனை உடைக்கும் வகையில் சமீபத்தில் படத்திற்கான போட்டோ சூட் நடத்தப்பட்டது. இதற்கென சென்னை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.
vaathi
வாத்தி :
தனுஷ் தற்போது டோலிவுட்டில் நேரடியாக அறிமுகமாகிறார். வெங்கி அட்லூரி என்பவர் இயக்கும் வாத்தி என்னும் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.
vendhu thanindhathu kaadu
வெந்து தணிந்தது காடு :
எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் தனுஷ் வித்தியாசமான ரோலில் நடிக்கிறார். ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ராதிகா சரத்குமார் , சித்திக் , நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம், சித்தி இத்னானி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும் தனுஷ்... வைரலாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் மாஸ் வீடியோ
vikram
விக்ரம் :
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த விக்ரம் படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் ரூ.430 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா என நட்சத்திரங்கள் ஜொலிக்க ரசிகர்களை குதூகலப்படுத்திய இந்தப் படம் கமலின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
viruman
விருமன் :
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதிதீ சங்கர் நாயகியாக நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் சங்கரின் மகள். மேலும் அவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளிவரவுள்ளது. படம் குறித்தான போஸ்டர்களும் பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.