ஹாலிவுட் நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும் தனுஷ்... வைரலாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் மாஸ் வீடியோ

The Gray Man : தி கிரே மேன் படத்தில் இருந்து தனுஷ் நடித்துள்ள மாஸான சண்டைக் காட்சியை படத்தின் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

Dhanush Mass fight scene from the gray man movie

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி அவர் நடிப்பில் தற்போது தி கிரே மேன் என்கிற ஹாலிவுட் படம் தயாராகி உள்ளது. இப்படத்தை அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கி உள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்...எனக்கு ஹார்ட் அட்டாக்கா..! கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் வதந்திகளுக்கு கூலாக பதிலடி கொடுத்த விக்ரம்

ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சி உள்ளதால், தி கிரே மேன் படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அமெரிக்காவில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். இதேபோல் விரைவில் இந்தியா வர உள்ள இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ், தனுஷுடன் சேர்ந்து இப்படத்தை புரமோட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்...'யாரடி மோகினி' சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு நடந்த திடீர் திருமணம்! இது தான் காரணமாம்... வைரலாகும் புகைப்படம்

Dhanush Mass fight scene from the gray man movie

இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் இருந்து தனுஷ் நடித்துள்ள மாஸான சண்டைக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஹாலிவுட் நடிகர்களை நடிகர் தனுஷ் அடித்து துவம்சம் செய்யும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சியை பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...ஜொலிக்கும் கருப்பு நிற ஹாட் உடையில்... அந்த இடத்தை ஓப்பனாக காட்டி கவர்ச்சியில் உச்சம் தொட்ட மாளவிகா மோகனன்!

கிரே மேன் படத்தில் நடிகர் தனுஷ் அவிக் சேன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், ஜெஸ்ஸிகா ஹென்விக், ஜூலியா பட்டர்ஸ், வேக்னர் மவுரா போன்ற ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios