எனக்கு ஹார்ட் அட்டாக்கா..! கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் வதந்திகளுக்கு கூலாக பதிலடி கொடுத்த விக்ரம்
Vikram Speech : கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்ரம், தனது உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு கூலாக பதிலடி கொடுத்தார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சியான் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, இயக்குனர் அஜய் ஞானமுத்து, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், நடிகர் துருவ் விக்ரம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... ரன்பீர் கபூருடன் குக் வித் கோமாளி' ஷிவாங்கி... விஜய் டிவியில் இருந்து பாலிவுட் வரை போயிட்டாங்களே..!
நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் அவர் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பாரா மாட்டாரா என குழப்பம் நீடித்து வந்தது. ஆனால் சொன்னபடியே விக்ரம் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... 'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய விக்ரம்... புகைப்பட தொகுப்பு!!
இந்த விழாவில் பேசிய விக்ரம் தனது உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு கூலாக பதிலடி கொடுத்தார். அதில் அவர் பேசியதாவது : “சும்மா நெஞ்சுல கைவச்சா கூட ஹார்ட் அட்டாக்னு சொல்லிடுறாங்க. எனக்கு ஒன்னும் இல்ல, நல்லா இருக்கேன். நான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனதும் கச்சா முச்சானு ஏதேதோ எழுதிருந்தாங்க. நல்லா இருந்துச்சு. சிலர் என்னுடைய முகத்தை மட்டும் மார்ப் செய்து, யாரோ ஒரு நோயாளியின் முகத்தோடு வைத்து போட்டோஷாப் செய்திருந்தார்கள். அதையும் பார்த்தேன், நல்லா தான் இருந்துச்சு.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு விஜய் சேதுபதி, ஊர் சுற்ற ஹரிஷ் கல்யாண் - மாஸ் காட்டும் மகிமா நம்பியார்
20 வயதில் நான் விபத்தில் சிக்கியபோது என் காலை இழக்க வேண்டிய நிலை இருந்தது. அதிலிருந்தே மீண்டு வந்துட்டேன். எவ்ளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒன்னுமே இல்லை. எனது குடும்பத்தினரும், எனது ரசிகர்களும், எனது நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கும் எந்த பயமும் இல்லை. நான் எப்பொழுதும் சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமா தான் என் உயிர்” என நெகிழ்ச்சி உடன் பேசினார் விக்ரம்.