திருமணத்திற்கு விஜய் சேதுபதி, ஊர் சுற்ற ஹரிஷ் கல்யாண் - மாஸ் காட்டும் மகிமா நம்பியார்
நான் சிங்கிள் தான் எனக்கு கிரஷ் என்றால் அது அஜித் சார் தான் ஆனால் சீக்ரெட் கிரஷ் விஜய் சேதுபதி மீது தான். அதோடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் நான் திருமணம் செய்ய ஆசைப்படுவேன் அதே நேரத்தில் ஹரிஷ் கல்யாணுடன் டேட் செய்ய ஆசை என கலகலகமாக பேசி உள்ளார் மஹிமா நம்பியார்.
Mahima nambiar
கேரளாவில் பிறந்த மகிமா நம்பியார் பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே நடித்துள்ளார். ஒரு சில மலையாள படத்தில் மட்டும் தான் இவர் காணப்பட்டார். முதலில் கரியசன் என்னும் மலையாள படத்தில் அறிமுகமான இவர் சாட்டை படத்தில் மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளையும் பெற்றார்.
Mahima nambiar
மகிமா நம்பியார்,மொசக் குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடி வீரன் இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜெய், மதுர ராஜா, மகாமுனி, அசுரகுரு, ஐயங்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்... வேண்டுகோள் விடுத்த மாதவன்!
Mahima nambiar
ஐயங்கரன் படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் மஹிமா நாயகியாகவும் நடித்து இருந்தனர். இவர்களுடன் காலி வெங்கட், அருள் தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் அபிஷேக், வினோத் ரவி, அரசு உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் கைவசம் தமிழ் ரதம், மலையாளத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...பாலா படத்துக்காக புது கெட்டப்... ரோலக்ஸில் இருந்து வணங்கான் ஆக மாறிய சூர்யா - வைரலாகும் போஸ்டர்
Mahima nambiar
இவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. தான் நடித்த படங்கள் குறித்து பேசிய நம்பியார் ஒரு கதாபாத்திரத்தினை தேர்வு செய்ததற்கு முன்னால் எப்போதும் தனக்கு இந்த கதாபாத்திரம் சரிவருமா என யோசிப்பதாகவும், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியுள்ளார். அதோடு தான் புகை பிடிக்கும் காட்சியை நன்றாக நடிக்கிறேன் என்றால் அதற்கு என் அண்ணன் தான் காரணம் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கார்கியை பார்த்து அசந்து போன உதயநிதி...ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கை!
Mahima nambiar
அதோடு சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் என்னுடைய நீண்ட நாள் ஆசை மம்முட்டியை பார்க்க வேண்டும் நாங்கள் இருவரும் ஒரே படத்தில் நடிப்பது தான். நான் சிங்கிள் தான் எனக்கு கிரஷ் என்றால் அது அஜித் சார் தான் ஆனால் சீக்ரெட் கிரஷ் விஜய் சேதுபதி மீது தான். அதோடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் நான் திருமணம் செய்ய ஆசைப்படுவேன் அதே நேரத்தில் ஹரிஷ் கல்யாணுடன் டேட் செய்ய ஆசை,மகேஷ்பாபு மாதிரி குணம் உள்ளவர் தான் கணவனாக வேண்டும் என கலகலகமாக பேசி உள்ளார் மஹிமா நம்பியார்.