கார்கியை பார்த்து அசந்து போன உதயநிதி...ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கை!
காரணம் கூறாமல் காவல்துறையால் கைது செய்யப்படும் தந்தையை மீட்பதற்காக நாயகி படும் இன்னல்கள் தொகுப்பே கார்கி
Sai pallavi
பிரேமத்தில் துவங்கிய சாய்பல்லவி தற்போது கார்கியில் நடித்துள்ளார். மலர் டீச்சராக இதயங்களில் குடிகொண்ட சாய்பல்லவி தற்போது தமிழில் கார்கி என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரித்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
மேலும் செய்திகளுக்கு...பாலா படத்துக்காக புது கெட்டப்... ரோலக்ஸில் இருந்து வணங்கான் ஆக மாறிய சூர்யா - வைரலாகும் போஸ்டர்
Sai pallavi
அதன்படி ஆசிரியராக காட்டப்படும் நாயகி வழக்கில் சிக்கிக் கொள்ளும் தனது தந்தையை மீட்பதற்காக போராடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. காரணம் கூறாமல் காவல்துறையால் கைது செய்யப்படும் தந்தையை அடுத்த இவர்களுக்கு குடும்பம் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிறது அதோடு நாயகி அவமானப்படுத்தப்படுகிறார் என்பதை இந்த படத்தின் கதையாக இருக்கும் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்... வேண்டுகோள் விடுத்த மாதவன்!
கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்த படம் உணர்ச்சிபூர்வமான நீதிமன்ற அரை நாடகமாக உள்ளது. இந்த படத்தை சாய் பல்லவி தவிர காளி வெங்கட், பருத்திவீரன் புகழ் சரவணன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா....மற்ற மொழிகளிலும் மாஸ் காட்டும் கமலின் விக்ரம்..
கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு செய்ய இரட்டையர்களான ஸ்ரையந்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா ஆகியோர் இசையமைத்துள்ளனர். சதீஷ் முகமது அலி படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளது. இதற்கிடையே தெலுங்கில் கடைசியாக சாய் பல்லவி விராட பருவம் படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
Sai pallavi
இந்நிலையில் கார்கின் சிறப்புக் காட்சியை பார்த்த பிரபல நடிகர் உதயநிதி, கார்கி சிறந்த திரைப்படங்களில் ஒன்று பெரிய திரைகள் சென்று பாருங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பு பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என குறிப்பிட்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.