பாலா படத்துக்காக புது கெட்டப்... ரோலக்ஸில் இருந்து வணங்கான் ஆக மாறிய சூர்யா - வைரலாகும் போஸ்டர்
நமது ஏசியாநெட் தமிழில் அன்றே சொன்னபடி சூர்யா 41 படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பட்டியை கிளப்பிய விக்ரம் படத்தில் மற்ற நடிகர்களை காட்டிலும் சூர்யா குறித்தான விமர்சனங்கள் தான் அதிகம் இருந்தன. முன்னதாக கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி பகத் பாஷை இருவர் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இறுதி நேரத்தில் தான் சூர்யா குறித்த அப்டேட் படக்குழு வெளியிட்டது.
மேலும் செய்திகளுக்கு...nayanthara marriage photos : பின்வாங்கிய பிரபல நிறுவனம்..கடுப்பாகி திருமண புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா!
kamal haasan gifts a watch to suriya
முன்பு கமலின் வாரிசாக சூர்யா நடிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சூர்யா முதல் முறையாக டெரர் கெட்டப்பில் இந்த படத்தில் தோன்றியிருந்தார். ரத்தம் சொட்ட சொட்ட கண்களில் வெறித்தனத்தோடு, போதை உட்கொண்ட வில்லனாக தெறிக்க விட்டிருந்தார் சூர்யா. கிளைமாக்ஸில் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே வந்த ரோலக்ஸ்-ன் ரோல்தான் விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தது என்றே கூறலாம்.
உண்மையில் விக்ரம் படத்தில் நடித்த சூர்யா சம்பளம் எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பலத்த வரவேற்பை பார்த்த கமல் தம்பிக்கு சிறிய வேடம் கொடுத்தது குறித்து வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதோடு மிக நீண்ட படைப்பை இருவரும் சேர்ந்து முயற்சிக்கலாம் என ட்வீட் செய்திருந்தார். அதோடு அன்பு பரிசாக காஸ்ட்லீ கைக்கடிகாரத்தையும் கொடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு...தி க்ரே மேன் படம் குறித்து ஓப்பனாக பேசிய தனுஷ்.. வாய்ப்பை கேட்டதும் துள்ளி குதித்ததாக பேட்டி
படம் வெளியாகி ஒரு மாதங்கள் கழித்தும் ரோலக்ஸ் குறித்தான தாக்கம் இன்னும் குறையவில்லை இந்நிலைகள் சூர்யாவின் மற்றும் ஒரு படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 41வது படமான இதன் டைட்டில் போஸ்டர் தான் இது.
SURIYA 41
நமது ஏசியாநெட் தமிழில் அன்றே சொன்னபடி இப்படத்திற்கு வணங்கான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... Suriya 41 : பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?... தீயாய் பரவும் தகவல்
இந்த போஸ்டரில் சூர்யா கோபத்துடன் காத்திருக்கக்கூடிய ஒருவராக இருக்கிறார். இவர் யாருக்கவோ சாக்கிற்கு பின்னால் ஒளிந்திருக்கிறார். மீனவன் என்பதால் அதற்குரிய தோற்றத்துடன் தாடி மீசை என டெரராக காட்சியளிக்கிறார் நாயகன்.