Suriya 41 : பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?... தீயாய் பரவும் தகவல்
Suriya 41 : ஒரு மாதமாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா, தற்போது அவருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சூர்யா 41. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதையடுத்து ஒரு மாதமாக நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனிடையே, இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் மோதல் ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக இப்படத்தின் தயாரிப்பாளரான சூர்யா, இப்படத்தை கைவிட முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த வாரம் பாலாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.
இந்நிலையில், சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி என பெயரிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இசையமைப்பாளருடன் ரொமான்ஸ் பண்ணும் மாஜி மனைவி... போட்டோ பார்த்து கடுப்பான பாலா - என்ன சொன்னார் தெரியுமா?