தி க்ரே மேன் படம் குறித்து ஓப்பனாக பேசிய தனுஷ்.. வாய்ப்பை கேட்டதும் துள்ளி குதித்ததாக பேட்டி
உரையாடலின் போது தனுஷிடம் நீங்கள் எப்படி படத்தில் ஒரு அங்கமானீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்தவர், இந்த படத்தில் நான் எப்படி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
முன்னணி நாயகனாக உயர்ந்துவிட்ட தனுஷ் ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். துள்ளுவதோ இளமையில் விமர்சனங்களுக்கு உள்ளாகிய நாயகனாக அறிமுகமான தனுஷ். தற்போது மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் நடித்த அந்தரங்கீ ரே மற்றும் தமிழில் மாறன் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகியிருந்தது. கல்யாணம் என தமிழில் பெயரிடப்பட்ட படத்தில் அக்ஷய் குமார் உடன் நடித்திருந்தார். மற்றும் மாறனில் சிம்பு பத்திரிகையாளராக நடித்து இருந்த போதிலும் இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.
தனுஷ் நடிப்பில் மேலும் தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. க்ரே மேன் வரும் ஜூலை 22ஆம் தேதியும், திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் பதினெட்டாம் தேதியும் வெளியாகவுள்ளது. மித்ரன் ஜவகர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் ராசி கண்ணா, நித்யா மேனன் ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க பல வருடங்கள் கழித்து அனிருத் ரவிச்சந்திரன், தனுஷ் படத்தில் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்து இருந்தன.
மேலும் செய்திகளுக்கு...மும்பையில் கவர்ச்சி நடிகையுடன் திடீர் சந்திப்பு... வைரலாகும் விக்கி - நயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
அதோடு செல்வராகவன் இயக்கத்தில் நானே ஒருவன் படத்திலும், தெலுங்கில் வாத்தி படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இதில் வாத்தி படத்தை வெங்கி அட்லூரி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அதிரடி படமாக தயாராகும் இதில் மாணவன், ஆசிரியர் என இரு ரோலில் தனுஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தின் மூலம் நேரடியாக டோலிவுட்டுக்கு அறிமுகம் ஆகிறார் தனுஷ்.
மேலும் செய்திகளுக்கு...ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய்..! சம்பள விவகாரம் குறித்து வெளியான தகவல்..!
இந்நிலைகள் சமீபத்தில் தி கிரே மேன் ப்ரோமோஷன் விழாவில் பேசிய தனுஷின் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷும் கலந்து கொண்டுள்ளார். வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் தனுஷ் இந்த படம் குறித்து சுவாரசியமாக பேசியுள்ளது தான் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
உரையாடலின் போது தனுஷிடம் நீங்கள் எப்படி படத்தில் ஒரு அங்கமானீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்தவர், இந்த படத்தில் நான் எப்படி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஒருநாள் "இந்தியாவில் உள்ள காஸ்டிங் நிறுவனத்திடமிருந்து, ஹாலிவுட் ப்ராஜெக்ட் இருப்பதாக தனக்கு அழைப்பு வந்ததாகவும், இந்த படம் மிகப்பெரிய படம் விரைவில் உறுதி கூற வேண்டும் என கூறியதாகவும், அப்போது விவரம் சொல்லச் சொன்னேன் இதை விட பெரியதாக கூற முடியாது, இது ஒரு அற்புதமான வாய்ப்பு என கூறினார். பின்னர் தான் படம் பற்றி கேட்டதும் துள்ளி குதித்தேன் என பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...12 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - உதயநிதி...நன்றி தெரிவித்த நாயகன் !
ருஸ்ஸோ சகோதரர்களால் இயக்கப்பட்ட தி கிரே மேனில் ரியான் கோஸ்லிங் நாயகனாக நடிக்கிறார். இதில் கிறிஸ் எவன்ஸ், தனுஷ், அனா டி அர்மாஸ், ரெஜி-ஜீன் பேஜ், பில்லி பாப் தோர்ன்டன், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மௌரா மற்றும் ஆல்ஃப்ரே வுடார்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.