மும்பையில் கவர்ச்சி நடிகையுடன் திடீர் சந்திப்பு... வைரலாகும் விக்கி - நயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Nayanthara : திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக உள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜோடியாக வெளியே சென்றுள்ளனர்.
நடிகை நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் மும்பையில் முகாமிட்டுள்ள நயன்தாரா, அங்கு நடைபெறும் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அதேபோல் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் மும்பையில் இருந்தபடியே தனது அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்... காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் உடன் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும்.
இதையும் படியுங்கள்... பாரிஸில் அஜித்தை பார்க்க அலைமோதிய கூட்டம்... டென்ஷனே ஆகாமல் ஏகே என்ன செய்தார் தெரியுமா? - வைரல் வீடியோ
திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக உள்ள விக்கி - நயன் ஜோடி, நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜோடியாக வெளியே சென்றுள்ளனர். அப்போது பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவை நேரில் சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். அந்த போட்டோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் சூர்யா போல்... விஜய்க்காக ரெடியாகும் மாஸான கேமியோ ரோல் - ஜவானில் கெத்து காட்ட தயாராகும் தளபதி
நடிகை மலைகா அரோராவுக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், பிரபல பாலிவுட் நடிகருமான அர்ஜுன் (வயது 37) கபூரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தற்போது லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.