ரோலெக்ஸ் சூர்யா போல்... விஜய்க்காக ரெடியாகும் மாஸான கேமியோ ரோல் - ஜவானில் கெத்து காட்ட தயாராகும் தளபதி
Jawan movie : அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த அட்லீ, தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... புது கார் வாங்கிய மைனா நந்தினி..இத்தனை லட்சத்தில் சொகுசு காரா?
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் நடிகை பிரியாமணி, நடிகர் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... வாவ்... திருமணமான இரண்டு மாதத்திற்குள்... சூப்பர் சிங்கர் அஜய் - ஜெர்ஸி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
ஜவான் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் 2-ந் தேதி வெளியிட உள்ளனர். இதனிடையே இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி சமீபத்தில் ஒப்பந்தமானார். முதலில் தெலுங்கு நடிகர் ராணாவை இந்த கேரக்டரில் நடிக்க வைக்க இருந்தனர். அவர் நடிக்க மறுத்ததால் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் படத்தில் கமல்ஹாசனும் இருக்கிறாரா? ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு.. வெளியான ஆச்சர்ய தகவல்!
இந்நிலையில், நடிகர் விஜய்யும் ஜவான் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் என்கிற இந்தி படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து பாடலுக்கு நடனமாடி உள்ள விஜய், தற்போது ஜவான் படத்துக்காக ஷாருக்கான் உடன் இணைந்து மாஸான கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலெக்ஸ் கேரக்டர் போல் இதுவும் செம்ம மாஸான ரோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.