வாவ்... திருமணமான இரண்டு மாதத்திற்குள்... சூப்பர் சிங்கர் அஜய் - ஜெர்ஸி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஜய் கிருஷ்ணா மற்றும் இவரது காதலி ஜெர்சிக்கு திருமணம் ஆகி 45 நாட்களே ஆகும் நிலையில், இவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் முதல், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்துக்குமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இதில் சாதாரண ஒரு போட்டியாளராக கலந்து கொண்டாலே அவர்கள் பிரபலமாகி விடுவதால், விஜய் டிவிக்கான மவுசு நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
மேலும் செய்திகள்: அனிரூத்தின் அக்காவா இது? சும்மா சினிமா ஹீரோயின் போல் இருக்காங்களே..! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!!
அந்த வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று, சூப்பர் சிங்கர். ஜூனியர் - சீனியர் என மாறி மாறி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது வரை பலரது வாழ்க்கையை பின்னணி பாடகர்களான உச்சத்தை தொட வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பாடிய பலர் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இன்று பாடகர்களாக உள்ளனர்.
மேலும் செய்திகள்: சாய்பல்லவிக்கு வந்த சோதனை... நீதிமன்ற தீர்ப்பால் செம்ம அப்செட்!!
அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. அச்சு அசல் உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்ட இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
இவர் அண்மையில், தன்னுடைய ரசிகையாக ஜெர்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் கிறிஸ்டியன் முறைப்படி இவர்களது திருமணம் நடந்த நிலையில், திருமணம் ஆன சில தினங்களிலேயே இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: சல்லடை போன்ற தங்க நிற டைட் உடையில்.. 48 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் மலைக்க வைக்கும் மலைக்கா அரோரா..!
அதாவது, அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெர்ஸி இருவரும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளனர். இதை தொடர்ந்து இவரது ரசிகர்கள் இந்த ஜோடிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.