பாரிஸில் அஜித்தை பார்க்க அலைமோதிய கூட்டம்... டென்ஷனே ஆகாமல் ஏகே என்ன செய்தார் தெரியுமா? - வைரல் வீடியோ

Ajithkumar : பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க சென்றிருந்தார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajith meet fans in Paris while he visiting eiffel tower

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டு விட்டதால் அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த மாதம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றார் அஜித்.

இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் சூர்யா போல்... விஜய்க்காக ரெடியாகும் மாஸான கேமியோ ரோல் - ஜவானில் கெத்து காட்ட தயாராகும் தளபதி

அங்கு சில நாட்கள் நண்பர்களுடன் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றார் அஜித். அதன்பின் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அஜித்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தமிழர்கள் என்ன பெரியாளா? தடாலடியாக டீசர் விழாவில் பேசிய கார்த்தி!

Actor Ajith meet fans in Paris while he visiting eiffel tower

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க சென்ற அஜித்தை, ரசிகர்கள் திடீரென சூழ்ந்துகொண்டனர். அப்போது ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும் சற்றும் டென்ஷன் ஆகாத அஜித், அவர்கள் அனைவருடன் அன்பாக பேசி நலம் விசாரித்து, பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... நயன் - விக்கி திருமணத்திற்கு மேட்சிங்... மேட்சிங்.. உடையில் வந்து அசத்திய சூர்யா - ஜோதிகா!! செம்ம கியூட்...

இதுதவிர ரசிகர் ஒருவரின் டி-ஷர்ட்டிலும் தனது ஆட்டோகிராப்பை போட்டுள்ளார். அஜித்தின் இந்த பண்பான குணத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் குவிந்த் வண்ணம் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios