நானே அதிமுக பொருளாளர்.. என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது.. ஆட்டத்தை ஆரம்பித்த OPS.. அதிர்ச்சியில் EPS
புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில், ஓபிஎஸ் வங்கிகளுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில், ஓபிஎஸ் வங்கிகளுக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நேற்று அதிமுக பொதக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- அதிமுக அலுவலகம் சீல்.. களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி.. உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!
எடப்பாடி தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் இல்லை. அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்ட இபிஎஸ், கே.பி.முனுசாமியையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறேன் என்றார்.
இதையும் படிங்க;- அதிமுக அலுவலகத்தில் கும்மாளம் போட்ட குடிகாரர்கள்.. ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் திடுக் தகவல்!
அதிமுகவில் இதுபோன்ற பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ். அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்திருந்தார். தற்போது புதிய பொருளாளராக தேர்வான திண்டுக்கல் சீனிவாசன் வங்கி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்... அதிமுக அலுவலகத்தில் கேவலமான வேலை செய்யலாமா.?? பன்னீரை டார் டாரா கிழித்த கே.பி முனுசாமி.
இந்நிலையில், அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய தேர்தல் ஆணைய சட்டத்தின் படி இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், நான்தான் பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் போது என்னைக் கேட்காமல் எந்தவித வரவு – செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னை கேட்காமல் வரவு – செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.