அதிமுக அலுவலகம் சீல்.. களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி.. உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.

AIADMK office sealed...Edappadi Palanisamy Appeal in Chennai High Court

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க;- உங்களுக்கும் மோடிக்கு என்ன வித்தியாசம் இருக்குது ஸ்டாலின்.. இதுதான் திராவிட மாடலா? சீறும் சீமான்..!

AIADMK office sealed...Edappadi Palanisamy Appeal in Chennai High Court

மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  ADMK Issue: எதிரிக்கு எதிரி நண்பன்.. சசிகலாவோடு கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்.? சசிகலா சொன்ன குட்டிக் கதை!

AIADMK office sealed...Edappadi Palanisamy Appeal in Chennai High Court

இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்தார்.  இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க;-  அதிமுக அலுவலகத்தில் கும்மாளம் போட்ட குடிகாரர்கள்.. ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் திடுக் தகவல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios