ஓபிஎஸ்... அதிமுக அலுவலகத்தில் கேவலமான வேலை செய்யலாமா.?? பன்னீரை டார் டாரா கிழித்த கே.பி முனுசாமி.

தீய சக்தி திமுகவுடன் இணைந்து கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் கேவலமான வேலையைச் செய்துள்ளார் பன்னீர்செல்வம் என அக்கட்சியின் பொதுக் குழுவில் கே.பி முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்

OPS... Can I do dirty work in AIADMK office.?? KP Munusamy Criticized O.Pannerselvam

தீய சக்தி திமுகவுடன் இணைந்து கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் கேவலமான வேலையைச் செய்துள்ளார் பன்னீர்செல்வம் என அக்கட்சியின் பொதுக் குழுவில் கே.பி முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார் இனி பன்னீர்செல்வம் எந்த சூழ்நிலையிலும் அதிமுகவில் இருக்கக்கூடாது  என்றும் அவர் கூறினார்.

இன்று திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார் மேலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நிரந்தர பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா என்ற விதியும் திருத்தப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! உள்ளே நுழைந்த வருவாய் துறை அதிகாரிகள்..வெளியேறினார் ஓபிஎஸ்

இதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றியுள்ளார். அப்போது அங்கு திரண்டிருந்த எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதி முழுவதும் கலவரபூமியாக காட்சி அளித்தது, அதனால் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தைச் சுற்றி  144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

OPS... Can I do dirty work in AIADMK office.?? KP Munusamy Criticized O.Pannerselvam

முன்னதாக பொதுக்குழுவில் ஓபிஎஸ்சுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மிகக் கடுமையாக பேசினர், அப்போது பொதுக்குழுவில் உரையாற்றிய கே.பி முனுசாமி ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்து பேசிய விவரம் பின்வருமாறு:-  இந்த பொதுக்குழுவை சிறப்பு குழு என கூறுவதற்கு காரணம் உள்ளது, சொந்தக் கட்சியில் இருப்பவரே பொதுக்குழு நடத்தக்கூடாது என நீதிமன்றத்தின் படியேறியதுதான் காரணம். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்கு எப்படி பல சோதனைகள் வந்ததோ, அதே போல ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னரும் பல சோதனைகளை அதிமுக சந்தித்துள்ளது.

இதையும் படியுங்கள்: எடப்பாடி பழனிசாமி ,கேபி முனுசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்...! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்

அதிமுக ஆட்சிக்கு எதிராக வந்த பல தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தனது அனுபவத்தால் தலைவர்களின் வழிகாட்டுதலால் சிறப்பாக ஆட்சி நிர்வாகத்தை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். தான் சிறந்த முதலமைச்சர் என்பதை நிரூபித்து காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி, நாட்டிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

எடப்பாடி பழனிச்சாமி மக்கள்  ஏற்றுக் கொண்டு விட்டனர், அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஜெயலிதாவுக்கு எந்த பங்கமும் வராதபடிக்கு பல சோதனைகளை கடந்து ஓ.பன்னீர் செல்வத்தை அரவணைத்து ஆட்சி நடத்திக் காட்டியவர், கட்சியை வழிநடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி.

OPS... Can I do dirty work in AIADMK office.?? KP Munusamy Criticized O.Pannerselvam

எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவைதான் அணுகியிருக்க வேண்டும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை ஏற்க மறுத்து  நீதிமன்றத்தை அணுகி தோல்வி கண்டுள்ளார். இதுவரை காட்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் எந்த தியாகத்தையும் செய்தவர் அல்ல, ஜெயலலிதாவுக்கு சோதனை வந்தபோது ஒரு குடும்பத்தாரால் முன்னிறுத்தப்பட்டவர்தான் ஓ. பன்னீர்செல்வம். இப்போது தீயசக்தி திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கேவலமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இனி அவர் எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவில் இருக்கக்கூடாது என பொதுக்குழு உறுப்பினர்கள் கூறிவருகின்றனர். நிச்சயம் அதற்கான செயல் வடிவம் தரப்படும். அனைத்திற்கும் மேலாக பொதுக்குழு உறுப்பினர்களுக்குதான் அளவில்லாத அதிகாரம் இருக்கிறது. திமுகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பவர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிச்சயம் தண்டிப்பார்கள் என அவர் பேசினார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios