விடாது கருப்பாய் துரத்தும் காளி பட போஸ்டர் சர்ச்சை... லீனா மணிமேகலைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த கோர்ட்

Leena Manimekalai : இந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

Delhi police summoned leena manimekalai regarding kaali movie poster controversy

லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் காளி வேடமிட்ட பெண் ஒருவர் கையில் LGBT கொடி மற்றும் வாயில் சிகரெட் உடன் போஸ் கொடுத்திருந்த புகைப்படம் இடம்பெற்று இருந்ததால் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையும் படியுங்கள்... Vijay : அந்த ஒரு காரணத்துக்காக பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த விஜய்... அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

இந்த போஸ்டர் மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்புகள் கிளம்பின. அதுமட்டுமின்றி இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். இதற்கெல்லாம் அசராத லீனா மணிமேகலை, இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என பதிலடி கொடுத்தார்.

இதையும் படியுங்கள்... கையில் சிகரெட் உடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா

Delhi police summoned leena manimekalai regarding kaali movie poster controversy

எதிர்ப்புகள் அதிகரித்ததன் காரணமாக டுவிட்டர் நிறுவனம் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி பட போஸ்டரை அதிரடியாக நீக்கியது. இதையடுத்து சிவன் - பார்வதி வேடமணிந்த இருவர், ஜோடியாக நின்று புகைப்பிடிக்கும் போட்டோவை ஷேர் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இதனிடையே அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும் தனுஷ்... வைரலாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் மாஸ் வீடியோ

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ராஜ் கவுரவ், இந்து கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாதிட்டார். இதையடுத்து இயக்குனர் லீனா மணிமேகலையும், காளி பட தயாரிப்பாளரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios