MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay : அந்த ஒரு காரணத்துக்காக பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த விஜய்... அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

Vijay : அந்த ஒரு காரணத்துக்காக பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த விஜய்... அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

Vijay : இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்க முயற்சித்தபோது அதில் நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 12 2022, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை பல வருட போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... கையில் சிகரெட் உடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா

24

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியு, குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இவர்களது கேரக்டர் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் இப்படத்தின் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்... வேண்டுகோள் விடுத்த மாதவன்!

34

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... nayanthara marriage photos : பின்வாங்கிய பிரபல நிறுவனம்..கடுப்பாகி திருமண புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா!

44

பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்க முயற்சித்தபோது அதில் நடிகர் விஜய்யையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். இதில் அவர் வந்தியத்தேவன் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் கமிட் ஆகிவிட்டால் இப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது, அதிக நாள் கால்ஷீட் தர வேண்டும் என மணிரத்னம் கூறியதால், இது நமக்கு செட் ஆகாது என விஜய் விலகி விட்டாராம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved