கையில் சிகரெட் உடன் ஸ்டைலாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா

Radhika sarathkumar : கொலை படத்தில் நடிகை ராதிகா ரேகா என்கிற பாஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்த படக்குழு, அவரின் தோற்றம் அடங்கிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

Radhika sarathkumar character poster from kolai movie create controversy

1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா, இன்றளவும் சினிமாவில் ஓய்வின்றி நடித்து வருகிறார். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடிக்கிறார். சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான யானை படத்தில் அருண் விஜய்க்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்த ராதிகா, அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு தாயாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் நடிகர்களை அடித்து துவம்சம் செய்யும் தனுஷ்... வைரலாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் மாஸ் வீடியோ

இதுதவிர பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கொலை என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா. கொலை படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து இருக்கிறார். இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்... மஞ்சள் நிற பட்டுப்புடவை கட்டி... மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்!!

Radhika sarathkumar character poster from kolai movie create controversy

அதன்படி சமீபத்தில் நடிகை ராதிகாவின் கேரக்டர் அடங்கிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் நடிகை ராதிகா ரேகா என்கிற பாஸ் கேரக்டரில் நடித்துள்ளதாக குறிப்பிட்டிருந்த படக்குழு, அவரின் தோற்றம் அடங்கிய போஸ்டரையும் வெளியிட்டிருந்தது. அதில் கையில் சிகரெட் உடன் சோபாவில் கால்மேல் கால்போட்டு கெத்தாக போஸ் கொடுத்தபடி இருக்கிறார் ராதிகா.

இதையும் படியுங்கள்... மைனா நந்தினியை தொடர்ந்து... புதிய கார் வாங்கிய ஆஜித்! அட இத்தனை லட்சமா?

இதன்மூலம் அவருக்கு இப்படத்தில் மிகவும் பவர்புல்லான வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த போஸ்டர் சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதில் நடிகை ராதிகா சிகரெட் வைத்திருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். பாஸ் என்றால் சிகரெட் வைத்திருக்கனுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios