இப்போ வேற கல்யாணம் ஆகிடுச்சு... விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்த இசைவாணி
Isaivani divorce : கானா பாடகியான இசைவாணி, தனது திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கான காரணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.
கானா பாடகியான இசைவாணி, பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்ட்டில் இணைந்து பல்வேறு சுயாதீன் பாடல்களை பாடியதன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஓராண்டிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதுகூட இவர் விவாகரத்து குறித்து எந்தவித தகவலையோ, விவாகரத்திற்கான காரணத்தையோ அவர் வெளியிடவில்லை.
இதையும் படியுங்கள்... இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!
தற்போது அவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் கானா பாடகி இசைவாணி, தனது விவாகரத்துக்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசி உள்ளார். பல்வேறு கனவுகளுடன் எனது திருமண வாழ்க்கையை தொடங்கினேன். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.
நான் கானா பாடல் பாட எனது வீட்டில் இருந்த ஆதரவு, எனது கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. கானா தான் எனக்கு உயிர், அதற்கு கணவர் வீட்டில் அனுமதி கொடுக்காததால், அவரை விட்டு பிரிந்துவிட்டேன். இப்போ அவர் வேறு ஒரு பெண்ணை மறுமணம் பண்ணிக்கிட்டார். எனக்கும், அவரது குடும்பத்துக்கும் தற்போது எந்தவிதமான தொடர்பும் இல்லை” என கூறியுள்ளார் இசைவாணி.
இதையும் படியுங்கள்... 75-வது படத்திற்காக இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனுடன் கூட்டணி அமைத்த நயன்தாரா - அனல்பறக்க வந்த அப்டேட்