Track List of Vikram's Cobra Movie Songs Released : நேற்று வெளியிடப்பட்ட பாடல்கள் இன்று ரசிகர்களுக்காக ஆடியோவாக வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இசை புயலின் மேஜிக் எனக் குறிப்பிட்டு ஆல்பத்திற்கான லிங்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் விக்ரமின் கோப்ரா படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விக்ரம் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற சந்தேகம் வலுத்து வந்தது. இந்த சந்தேகங்களுக்கு காரணம் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு தான். சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனையும், அவரது மேலாளரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...Ajith Kumar in Paris : பாரிசில் அஜித்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விக்ரம் வீடு திரும்பினார். இதை அடுத்து நேற்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் நாயகன் கலந்து கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாசாக என்ட்ரி கொடுத்திருந்தார் விக்ரம்.

மேலும் செய்திகளுக்கு...வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று

 விழாவில் பேசிய சீயான், ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். அதோடு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் வதந்திகளை பரப்பியது குறித்தும், ஆனால் எல்லாவற்றிலும் தான் விளையாட்டாக எடுத்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார். 

Scroll to load tweet…

கோப்ரா படத்தை ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் மூலம்ஸ்ரீநிதி செட்டி, இர்பான் உள்ளிட்டோர் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு...அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!

கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியை விக்ரமுக்கு ஜோடியாக காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இவர்களுடன் மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிஹா, கே.எஸ்.ரவிக்குமார், மிர்னாலினி ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட பாடல்கள் இன்று ரசிகர்களுக்காக ஆடியோவாக வெளியாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இசை புயலின் மேஜிக் எனக் குறிப்பிட்டு ஆல்பத்திற்கான லிங்கை வெளியிட்டுள்ளது.

Scroll to load tweet…

2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கோப்ரா படம் மூன்று ஆண்டுகள் கழித்த தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது .கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதற்கிடையே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். அவரது போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. குதிரையில் மாசாக அமர்ந்திருந்த சீயானை திரையில் காண திரைப் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.