Asianet News TamilAsianet News Tamil

விஸ்வநாத ராமமூர்த்தி, இளையராஜாவுடன் இசை புயல்..பார்த்திராத புகைப்படம் இதோ!

பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமான இதில் மூத்த இசையமைப்பாளர்கள் மூவரும் வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் பைஜாமா ஜிப்பா அணிந்துள்ளார்.

AR Rahman with ramamoorthy msvishvanathan illayaraja never seen photo
Author
Chennai, First Published Jul 12, 2022, 8:18 PM IST

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பாத்திராத புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று ரகுமான் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவை பகிர்ந்து மூத்த தமிழ் இசையமைப்பாளர்கள் எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி மற்றும் இளையராஜா ஆகியோருடன் ஏ ஆர் ரகுமான் என குறிப்பிட்டிருந்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

மேலும் செய்திகளுக்கு...Vikram's Cobra Songs : வெளியானாது விக்ரமின் கோப்ரா’ பட பாடல்கள்..லிங்க் இதோ!

இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமான இதில் மூத்த இசையமைப்பாளர்கள் மூவரும் வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்துள்ளனர், ஏ.ஆர் ரகுமான் பைஜாமா ஜிப்பா அணிந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர் ஒரே படத்தில் மூன்று புராணங்கள் என குறிப்பிட்டுள்ளார். இன்னொரு ரசிகர் இந்த படம் பொக்கிஷம், வரலாற்று சிறப்பு என குறிப்பிட்டுள்ளார்.

ஏ ஆர் ரகுமான் தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் மணிரத்னம் ஏ ஆர் ரகுமானின் 15 வது படமாகும். அதோடு விக்ரம் தற்போது நடித்து முடித்துள்ள கோப்ரா படத்திற்கும் இசைப்புயலே பின்னணி கொடுத்துள்ளார்.

AR Rahman with ramamoorthy msvishvanathan illayaraja never seen photo

மேலும் செய்திகளுக்கு..."வேஷ்டிக்கு முடிவில்லை "..காலில் மெட்டியணிந்து..மத்திய அழகை காட்டி இழுக்கும் விஜய் பட நாயகி!

ரகுமான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்வேறுபாடுகளை கொண்டாடுவது மற்றும் கலையின் மூலம் ஒன்றுபடுவது குறித்து மிகவும் வலுவான அறிக்கையை வெளியிட்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மலேசியா சென்றிருந்தபோது  ஏற்பட்ட ஒரு நிகழ்வை உதாரணம் காட்டியிருந்தார். வாடா இந்திய நடிகர் ஒருவரை இந்தியாவையும் சேர்ந்தவர்களையும் அவர் அழகாக இருப்பதால்  அதிகம் விரும்பினார்கள் என்று கூறினார். அந்த நிகழ்வு தனக்கு மிகுந்த வருத்தம் அளித்ததாகவும் வட இந்தியா சிறந்தது என்ற முடிவுக்கு எப்படி வந்தார். உண்மையை தெற்கில் எடுக்கப்பட்ட படங்களை அவர் பார்க்கவில்லையா என ஆச்சரியப்பட்டதாகவும் தான் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியிருந்தார்.

 

மேலும் செய்திகளுக்கு..."நடிகை கடத்தலுக்கும் திலீப்புக்கும் தொடர்பில்லை": முன்னாள் காவல் அதிகாரியின் வீடியோவால் பரபரப்பு!

அதோடு  மக்களை வண்ணம் தீட்ட வேண்டாம், அவர்களது கண்ணியம் தரும் கதாபாத்திரங்களை கொடுங்கள் தென்னிந்தியர்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் இதுதான் ஏனென்றால் நாம் நிறத்தை விரும்புகிறோம். நாம் அவர்களை மிகவும் புகழ்பெற்ற கண்ணியமான முறையில் பிரதிநிதித்துவ படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதோடு இந்தியாவை தெற்கு மற்றும் வடக்கு என பிரிக்க விரும்பவில்லை பிராந்தியர்களுக்குள் எல்லைகள் உடைக்கப்படுவதால் நம்மை மேம்படுத்துவதற்கான நேரம் இது என்றும் கலை மூலம் இது மிகவும் எளிதானது என்றும் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios