Asianet News TamilAsianet News Tamil

உயர் கல்வித்துறையிடம் ஆலோசனை நடத்தாத ஆளுநர்..! பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த தமிழக அரசு- பொன்முடி ஆவேசம்

பட்டமளிப்பு விழாவில் கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?  என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Higher Education Minister Ponmudi accused the Tamil Nadu Governor of introducing politics in the graduation ceremony
Author
Chennai, First Published Jul 12, 2022, 2:22 PM IST

திமுக- ஆளுநர் மோதல்

திமுக அரசிற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு பிரச்சனை, தமிழக அரசு திட்டங்களை ஆய்வு செய்வது என அடுத்தடுத்து மோதல்கள் ஏற்பட்டது. மேலும் நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் கொடுத்த விருந்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து இருந்தன. இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரசியலை புகுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன என கூறியிருந்தார்.

Higher Education Minister Ponmudi accused the Tamil Nadu Governor of introducing politics in the graduation ceremony

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த தமிழக அரசு

இந்தநிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,  மதுரை  காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழா ஜூலை 13 ம் தேதி நடைபெற்றவுள்ளதாகவும், ஆனால் இணை வேந்தரான தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தெரிவித்தார்.மேலும்,  உயர்கல்வித்துறை செயலாளரிடமோ ஆலோசனை நடத்துவதில்லை என்றும், பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது  வழக்கம் என்றார். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கௌரவ விருந்தினராக ஒன்றிய இணை அமைச்சர் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.ஆளுநர் ஆர்.என். ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ஆளுநராக இல்லாமல் பாஜகவிற்கு பிரச்சார செய்பவர்களில் ஒருவராக ஆளுநர் உள்ளதாகவும்  அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.

யாராயிருந்தாலும் வெட்டுங்கள்..! அடித்து உதையுங்கள்..! மைக்கில் பேசிய ஓபிஎஸ்- மாவட்ட செயலாளர் புகார்

திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

Higher Education Minister Ponmudi accused the Tamil Nadu Governor of introducing politics in the graduation ceremony

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்

இவ்வாறு, பட்டமளிப்பு விழாவில் கடைபிடிக்கப்படும்  மரபு முறைகள் முறையாக எதையும் கடைபிடிக்காத காரணத்தினால் ஆளுநரை கண்டிக்கும் வகையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக குறிப்பிட்டார்.இது போன்ற பிரச்சினைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநர் வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட முதலமைச்சர் வேந்தராக இருப்பதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இன்னும் கையொப்பம் இடவில்லை என்றார். இதே போல ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பொன்முடி கூறினார். மேலும் ஆளுநர் திராவிடம் குறித்து பேசும் போது வரலாற்றை தெரிந்த பின்பு பேசவேண்டும் என்றும் எத்தனை இசங்கள் இருந்தாலும் ஹூமனுசமான மனிதாபிமானம் தான் திராவிட மாடல் என்றும் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

தமிழக ஆளுநர் சர்ச்சை கிளப்புவதை பொழப்பாக வைத்திருக்கிறார்.. போட்டு தாக்கும் டி.ஆர். பாலு..!

 

Follow Us:
Download App:
  • android
  • ios