யாராயிருந்தாலும் வெட்டுங்கள்..! அடித்து உதையுங்கள்..! மைக்கில் பேசிய ஓபிஎஸ்- மாவட்ட செயலாளர் புகார்

அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்கி ஆவணங்களை கொள்ளையடித்துச்சென்ற  ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பாக  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Complaint in police station demanding action against OPS and his supporters who attacked AIADMK office and looted goods

அதிமுக அலுவலகத்தில் வன்முறை

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றிய நிலையில், முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் அதிமுக தென் சென்னை (வடக்கு, கிழக்கு) பகுதியின் மாவட்ட செயலாளர் ஆதிராஜராம் புகார் தெரிவித்துள்ளார். அதில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 40 வருடமாக செயல்பட்டு வருகிறது. இது கட்சிக்கு பாத்தியப்பட்ட சொத்தாகும். கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தச் சொல்லி பொதுக்குழுவின் 80 சதவிகித உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 11.07.2022 காலை 9.15 மணிக்கு சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து திரு.O.பன்னீர் செல்வம் அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்திருந்தார். மேற்படி வழக்கில் இடைக்கால உத்தரவு தொடர்பான மனுவில், பொதுக்குழு நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 11.07.2022 அன்று காலை 09.00 மணிக்கு அதனை தள்ளுபடி செய்தது. 

இபிஎஸ்-ஓபிஎஸ் பதவி சண்டைக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்..! பரபரப்பு புகார் தெரிவித்த ஆம் ஆத்மி

Complaint in police station demanding action against OPS and his supporters who attacked AIADMK office and looted goods

யாராக இருந்தாலும் வெட்டுங்கள்

இந்தநிலையில்  தலைமை கழக அலுவலகத்தை தாக்க போவதாக கேள்விபட்டு அங்கு விரைந்து சென்று பார்த்த போது, O.பன்னீர்செல்வம், M.L.A. அவர்கள் வெள்ளை நிற Tempo Travellor Van ல் முன் பக்கம் அமர்ந்து கொண்டும் அவர் வாகனத்தின் முன் சுமார் 300 பேர் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் தெரிந்து காட்ட கூடிய ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கையில் கத்தி, கடப்பாறை, தடி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் பெரிய கற்களை வீசிகொண்டே தலைமை கழகம் நோக்கி சென்றனர். O.பன்னீர்செல்வம், வாகனத்தில் R.வைத்தியலிங்கம் M.L.A, J.C.D.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் M.L.A. புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர். O.பன்னீர்செல்வம், மைக்கில் "யாராயிருந்தலும் வெட்டுங்கள், அடித்து உதையுங்கள்" என்று சொல்ல மேற்படி ரவுடிகள் ரோட்டில் நின்று கொண்டு இருந்த கழக தொண்டர்களையும், பொது மக்களையும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

Complaint in police station demanding action against OPS and his supporters who attacked AIADMK office and looted goods

ஓபிஎஸ் மீது நடவடிக்கை ?

தலைமை கழக அலுவலகம் வந்த அவர்கள் பூட்டபட்டு இருப்பதை பார்த்த O.பன்னீர்செல்வம்,M.L.A."டே கேட்டை அடித்து உடையுங்கள்" என்று சொன்னவுடன் அவருடன் வந்த குண்டர்கள் கடப்பாறை கொண்டு பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். கட்டிடத்தின் மெயின் கதவை கடப்பாறை, கத்தி, தடி கொண்டு தாக்கி திறந்து கொண்டு O.பன்னீர்செல்வம், R.வைத்தியலிங்கம் M.L.A, J.C.D.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் M.L.A. புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த ரௌடிகள், அடியாட்கள் அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த அனைத்து பொருள்களையும் அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை  கொள்ளை அடித்து வெள்ளை நிற Tempo Travellor Van ல் கொண்டு வைத்து புறப்பட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். எனவே சம்பவத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளையடித்து சென்ற பொருட்களை திரும்ப பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

145 சட்ட விதியில் அதிமுக அலுவலகத்திற்கு சீல்...! கட்சி அலுவலகம் யாருக்கு..? சட்டம் கூறுவது என்ன..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios