145 சட்ட விதியில் அதிமுக அலுவலகத்திற்கு சீல்...! கட்சி அலுவலகம் யாருக்கு..? சட்டம் கூறுவது என்ன..?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் போட்டி போட்டதன் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீல் எப்போதும் அகற்றப்படும், 145 சட்ட விதியில் கூறுவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

Who owns the sealed AIADMK party office  What the law says

அதிமுக அலுவலகத்தில் மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்ற போது ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கைப்பற்றினார். அப்போது ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு மோதிக்கொண்டதால் பதற்மான சூழ்நிலை உருவானது. ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை வெளியேற கூறிய வருவாய்துறை அதிகாரிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு  சீல் வைத்தார்கள். அதிமுக அலுவலகம் அருகே நடைபெற்றதாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர். மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும், ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்ததாக காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 

இபிஎஸ்-ஓபிஎஸ் பதவி சண்டைக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்..! பரபரப்பு புகார் தெரிவித்த ஆம் ஆத்மி

Who owns the sealed AIADMK party office  What the law says

145 பிரிவின் கீழ் அலுவலகத்திற்கு சீல்

இந்தநிலையில், கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வருகின்ற 25.07.2022 அன்று இரு தரப்பினரும் ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறி ச / பி 145 - ன் படி இருதரப்பினருக்கும் வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் வழங்கினார். இந்தநிலையில் CRPC 145 வது சட்ட பிரிவில் ஒரு இடத்திற்கு இருவர் உரிமை கோரும் போது அந்த நேரத்தில் அங்கு இருக்கும் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல்  சூழல் உருவாகும் போது அந்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த இடத்திற்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இடம் தொடர்பாக  வருவாய் கோட்டாட்சியர் நடத்தும் விசாரணையில் இரு தரப்பினரும் ஆஜராகி தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைத்த பிறகு இந்த இடத்திற்கான சீல் எடுக்கப்படும் என  CRPC 145 வது சட்ட பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

Who owns the sealed AIADMK party office  What the law says

வன்முறையை தடுக்க 144 சட்டம்

மேலும் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த பகுதி வன்முறையாக மாறியது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதால் அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்றவியல் சட்டப்பிரிவு 144ன்படி ஒரு பகுதியில் பதட்டமான சூழல் உருவாகி அந்த இடத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் போது  அங்கு 144 உத்தரவை பிறப்பிக்கலாம் என்றும் அந்த 144 தடை உத்தரவின்படி 4 பேருக்கு மேல் அங்கு அனுமதி இல்லாமல் கூட்டம் கூட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி கூட்டம் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது.? அலுவலகம் யாருக்கு சொந்தம்.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வருவாய்த் துறை நோட்டீஸ்!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios