தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

09:51 PM (IST) Aug 28
தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து வரும் செப்டம்பர் 3-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு” நிகழ்வை முன்னெடுக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
09:24 PM (IST) Aug 28
திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி வீட்டு இல்ல திருமண விழா நாளை நடைபெறுகிறது.
08:56 PM (IST) Aug 28
பிரபல திரைப்பட தரவு இணையதளமான ஐ எம் டி பி இந்த படம் விமர்சன ரீதியில் எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்..என்ன விஷயம் தெரியுமா?
08:22 PM (IST) Aug 28
அதிகபட்சம் 10 அல்லது 15 நிமிடங்கள் இருவரும் புரிந்து கொண்டு நடந்து கொள்வதில் என்ன கெட்டு விட போகிறது. அப்படி வாழ்பவர்கள் வரம் பெற்றவர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.
இது இல்லாவிட்டால் உடலுறவு முழுமை பெறாது...வெட்கப்படாமல் பதில் சொன்ன காஜோல்
08:15 PM (IST) Aug 28
அதிமுக பொதுக்குழு வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
07:48 PM (IST) Aug 28
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக ஆளுநர் மாளிகையில் உபசரிப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
07:19 PM (IST) Aug 28
தமிழக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் 5,200 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதையடுத்து, இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை அமைக்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
07:13 PM (IST) Aug 28
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க...TN TET தேர்வர்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நாளை நடைபெறுகிறது.!
07:10 PM (IST) Aug 28
விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு..மாதம் ரூ. 60,000/- சம்பளம்..விவரம் அறிய!
06:10 PM (IST) Aug 28
நொய்டாவில் இருக்கும் இரட்டை கோபுர கட்டிட இன்று தகர்க்கப்பட்டது. இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
05:04 PM (IST) Aug 28
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
04:36 PM (IST) Aug 28
‘இரு குடும்பங்களுக்கும் உறவான கோபாலபுரம் வீடு நட்பு பாலமாய் உயர்ந்தது’ என்று முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
04:15 PM (IST) Aug 28
தேன்மொழி பாடலை தத்துரூமாக பாடி அசத்தியுள்ளார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. அவரது வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க...தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்
04:10 PM (IST) Aug 28
சென்னை பசுமை வழி சாலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
03:23 PM (IST) Aug 28
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒரு விழாவாக கொண்டாடினர். அதில் இயக்குனர் மிஷ்கினும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “தான் பணியாற்றிய நடிகர்களில் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்றால் அது விஷால் தான் என கூறினார். மேலும் படிக்க
02:47 PM (IST) Aug 28
இன்று மதியம் 2.30 மணிக்கு இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் என்று அழைக்கப்படும் நொய்டாவின் பிரபல இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்டது.
02:42 PM (IST) Aug 28
'மன்னிக்கவும் விரைவில் இணைவேன் ' என விக்ரம் கோப்ரா ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர்
மேலும் படிக்க..இதனால் தான் 'கோப்ரா' ப்ரோமோஷனில் கலந்து கொள்ளவில்லை..புதிய விளக்கம் தந்த இயக்குனர்
02:38 PM (IST) Aug 28
போதுமான நிதியே இல்லாதபோது மெரினாவில் ரூ.80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா? என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரூ.80 கோடிக்கு 6.5 கோடி மக்களுக்கும் இலவசமாக பேனா வாங்கி கொடுத்து விடலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
02:36 PM (IST) Aug 28
கோப்ரா படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இப்படம் 3 மணிநேரம் 3 நிமிடம் 3 செகண்ட் நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படிக்க
01:44 PM (IST) Aug 28
ஹங்கேரி நாட்டில் இசைக் கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டு இருந்தார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு செல்ல இருந்தார் இளையராஜா. அவர் செல்ல இருந்த விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதற்காக அதிகாலையிலேயே விமான நிலையம் வந்தார் இளையராஜா. மேலும் படிக்க
12:47 PM (IST) Aug 28
திமுக தலைவராக மு.ஸ்டாலின் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கால கட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
12:35 PM (IST) Aug 28
வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நடிகை தற்போது தான் போதைக்கு அடிமையானதற்கான காரணத்தை கூறி உள்ளார். மேலும் படிக்க
11:44 AM (IST) Aug 28
நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்ததாகவும், பின்னர் சில காரணங்களுக்காக அந்த காட்சியை ‘பிசாசு 2’ படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அதற்கான காரணத்தை கூறி உள்ளார் இயக்குனர் மிஷ்கின். மேலும் படிக்க
10:53 AM (IST) Aug 28
உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அடுத்ததாக தென் மாவட்டத்தை சேர்ந்த மூத்த நிர்வாகிக்கு ஓபிஎஸ் அணி ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:46 AM (IST) Aug 28
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது எண்ணூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் ஒன்று லீக் ஆகி உள்ளது. இதனால் ஜெயிலர் படக்குழு கடும் அப்செட்டில் உள்ளதாம். மேலும் படிக்க
10:15 AM (IST) Aug 28
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில், தமிழ் நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழையும் அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் வலியுறுத்தியுள்ளார்.
09:53 AM (IST) Aug 28
சிவகார்த்திகேயனுக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி திருமணம் நடந்தது. இத்தம்பதி தங்களது 12-வது திருமண நாளை நேற்று கொண்டாடினர். அப்போது மனைவியுடன் ஜோடியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார் சிவா, அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
09:26 AM (IST) Aug 28
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்று (ஆகஸ்ட் 28ம்தேதி) துபாயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். மேலும் படிக்க
09:24 AM (IST) Aug 28
தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகளுக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது எப்போதும் போல மௌனத்துடன் கடந்து செல்வாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எகேள்வி எழுப்பியுள்ளார்.
09:08 AM (IST) Aug 28
நடிகர் அஜித் தற்போது தனது நண்பர்களுடன் ஜாலியாக பைக் ட்ரிப் சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதில் அவர் ஓட்டிச் சென்ற பைக்கில் விவேகம் படத்தில் அஜித் பேசிய பஞ்ச் டயலாக்கும் இடம்பெற்று உள்ளது. மேலும் படிக்க
08:45 AM (IST) Aug 28
கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம்! என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
08:43 AM (IST) Aug 28
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி ஜெயஸ்ரீ ராஜேஷ் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தற்போது ஒரு தொழிலதிபராக உள்ளார். மேலும் படிக்க
08:32 AM (IST) Aug 28
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த சுமார் 3ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கமுடியாமல் திணறிவருகிறார். 3 ஆண்டுகளாகவே அவர் சரியான ஃபார்மிலும் இல்லை. மேலும் படிக்க
08:16 AM (IST) Aug 28
பிசியான நடிகராக வலம் வரும் விஜய், தற்போது சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் ஒன்றை வாங்கி உள்ளாராம். அந்த ஆடம்பர பிளாட்டை தனது அலுவலகமாக பயன்படுத்த விஜய் முடிவு செய்து உள்ளாராம். மேலும் படிக்க
07:55 AM (IST) Aug 28
திருவிழா என்றாலே சொந்தங்கள், நண்பர்களை சந்திப்பதும், அவர்களுக்கு விருந்துக்கு அழைப்பதும், அல்லதுநாம் அவர்கள் வீட்டுக்கு விருந்துக்குச் செல்வதும் என்பதைத்தான் வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் கல்எறியும் திருவிழா பற்றி கேள்விபட்டிருக்குறீர்களா... மேலும் படிக்க
07:44 AM (IST) Aug 28
புதிதாகக் கடை திறப்பவர்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதிலும் உணவகம் திறப்பவர்கள் விதவிதமான அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். அதுவும் தற்போது பெரும்பாலும் புழக்கத்தில் 50 பைசா, 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்குவதை டிரெண்டாக்கி வருகிறார்கள். மேலும் படிக்க
07:43 AM (IST) Aug 28
நடிகர் புகழின் திருமண தேதி வெளியாகி உள்ளது. இவர் கோவையை சேர்ந்த பென்சியா என்கிற பெண்ணை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அவர்களின் திருமண பத்திரிக்கை வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
07:30 AM (IST) Aug 28
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வெளிநாட்டில் உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி காணொலி வாயிலாக அதில் பங்கேற்க உள்ளனர்.
07:15 AM (IST) Aug 28
சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 08.09.2022 தேதி வியாழன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது. மேலும் படிக்க
07:13 AM (IST) Aug 28
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.மேலும் படிக்க