‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி... புது விளக்கம் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்
Pisasu 2 : நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்ததாகவும், பின்னர் சில காரணங்களுக்காக அந்த காட்சியை படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
பிசாசு 2 படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து உள்ளார்.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்ததாகவும், பின்னர் சில காரணங்களுக்காக அந்த காட்சியை படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த காட்சியால் இப்படத்தை குழந்தைகள் காண முடியாத சூழல் உருவாகி இருந்ததால், ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சியை அவர் நீக்கிவிட்டதாக தகவல் பரவி வந்தது.
இதையும் படியுங்கள்.... அச்சச்சோ... விஜய்க்கு நடந்தது இப்போ ரஜினிக்கும் நடக்குதே... கடும் அப்செட்டில் நெல்சன்
இந்நிலையில், அந்த காட்சி குறித்து புதிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார் மிஷ்கின். அதன்படி அந்த நிர்வாணக் காட்சியை தான் படமாக்கவே இல்லை என்று அவர் கூறி உள்ளார். அதற்கான போட்டோஷூட் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும், அதையும் தான் எடுக்கவில்லை என்று கூறியுள்ள மிஷ்கின், ஆண்ட்ரியாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அதை எடுத்ததாக கூறியுள்ளார்.
மேலும் ஆண்ட்ரியாவை வைத்து நிர்வாணமாக நடத்தப்பட்ட போட்டோஷூட்டை தான் பார்த்தது கூட இல்லை என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். பிசாசு 2 படத்தை இந்த மாதம் 31-ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அன்றைய தினம் பெரிய படங்கள் ரிலீசாவதால், பிசாசு 2 படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்காத சூழல் உருவானது. இதனால் அப்படத்தின் ரிலீசை தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.... ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் இந்தியன் போட்டோ சூட்... உடல் முழுவதும் தோட்டாக்களுடன் மிரட்டும் கமல்