ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் இந்தியன் போட்டோ சூட்... உடல் முழுவதும் தோட்டாக்களுடன் மிரட்டும் கமல்
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்கிற பெயரில் கமலின் போட்டோ ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருகிறது.
Indian 2
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட இடைவெளியில் இருக்கிறது இந்தியன் 2. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா மற்றும் பிற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவில் படத்திற்கான தோற்றங்களுக்கு தயாராகி வருகிறார் கமலஹாசன். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் இந்தியன் 2வில் நாயகன் வலிமையாகவும் கொடியவராகவும் காணப்படுவார் என தெரிகிறது. மேலும் கமலஹாசன் உடன் சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
Indian 2
1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிகளை கண்டது லஞ்சத்திற்கு எதிராக கைகளை உயர்த்தும் வயதான சுதந்திரபோராட்ட வீரனின் கதையாக அமைந்த பலரின் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்த படத்தை சங்கர் இயக்கியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...தம்பிக்கு வில்லனாகும் செல்வராகவன்? நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் இதோ!
Indian 2
தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முன்னதாக செட்டில் ஏற்பட்ட கோர விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சங்கர் ராம் சரனின் புதிய படத்தை இயக்குவதற்காக டோலிவுட் பக்கம் சென்று விட்டார். கமலஹாசனும் விக்ரம் படத்தில் பிசியாக இருந்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் பிளாக் பாஸ்டர் படமாக அமைந்து பல கோடி ரூபாய்களை வசூலாக பெற்றது. அதோடு கமலஹாசனின் 300 கோடி வசூல் படமாக உலக அரங்கில் புகழை சேர்த்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...'உங்களை ஏன் நீக்க கூடாது'.. கே பாக்யராஜுக்கு நோட்டிஸ் விட்ட நடிகர் சங்கம்
Indian 2
இது குறித்து சமீபத்தில் ட்வீட் செய்திருந்த இயக்குனர் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் 15 வது படத்தை செப்டம்பரில் துவங்க உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். அதோடு எந்தவித தொய்வும் இல்லாமல் இரண்டு படத்தையும் ஒரே சமயத்தில் இயக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்தியன் படத்தில் தந்தை மகன் ஆகிய இரண்டு வேடங்களில் கமலஹாசன் நடித்திருந்தார் இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டது ஆனால் பல ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...சேலை சரிவதை தடுக்காமல் சொக்கி நிற்கும் ஜான்வி கபூர்...மயிலின் மகள் கொடுத்த கிக் போஸ்
Indian 2
மேலும் இயக்குனர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாலும் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக சமாதானமான இவர்கள் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். லைகா உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.
Indian 2
இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்கிற பெயரில் கமலின் போட்டோ ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருகிறது. ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வரும் இந்த புகைப்படத்தில் கமலஹாசன் உடல் முழுவதும் புல்லட்டுகளை சுற்றியுள்ளார். புலி தோல் மீது அமர்ந்திருக்கும் இவருக்கு அருகில் ஒரு மது பாட்டிலும் உள்ளது.