தம்பிக்கு வில்லனாகும் செல்வராகவன்? நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் இதோ!
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் செல்வராகவன் கலக்கி வருவதால் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்திலும் இவர்தான் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் தனுஷுடன் இணைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது. இதில் காதல் கொண்டேன், புதுக்கோட்டை இரண்டு படங்களும் பிளாக்பாஸ்டர் படங்களாக அமைந்தது. ஆனால் மயக்கம் என்ன படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. தற்போது நானே வருவேன் படம் மூலம் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது.
இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மாரி புகழ் பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா புதுப்பேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளார். எஸ் தானு இந்த படத்தை தயாரிக்கிறார். படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் இந்துஜா மற்றும் எலி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர் படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...'உங்களை ஏன் நீக்க கூடாது'.. கே பாக்யராஜுக்கு நோட்டிஸ் விட்ட நடிகர் சங்கம்
இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக செல்வராகவன் நடிக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.. படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சாணிக்காகிதம், பீஸ்ட் படங்கள் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள செல்வராகவன். தற்போது பகாசுரன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...சேலை சரிவதை தடுக்காமல் சொக்கி நிற்கும் ஜான்வி கபூர்...மயிலின் மகள் கொடுத்த கிக் போஸ்
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இவர் கலக்கி வருவதால் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்திலும் இவர்தான் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. பிரபலங்கள் இருவரும் திரையில் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் எனவும் ஒரு பேச்சு உண்டு. முன்னதாக தனுசை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் செல்வராகம் திட்டமிட்டுள்ளார். ஓரிரு வருடங்களுக்கு இந்த படம் தொடங்கும் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...வேற லெவல் ட்ரெண்டா இருக்கே...அலங்கரா பொருளை ஆடையாக்கிய சாக்ஷி அகர்வால்...ஹாட் கிளிக்ஸ்
தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர் ,நித்யாமேனன் என மூன்று நாயகிகளும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகிய பிரபலங்களும் நடித்திருந்தனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்றிருந்தது. அதோடு டோலிவுட்டில் வாத்தி உள்ளிட்ட படங்களிலும் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.