'உங்களை ஏன் நீக்க கூடாது'.. கே பாக்யராஜுக்கு நோட்டிஸ் விட்ட நடிகர் சங்கம்
சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது என நோட்டிஸில் குறிப்பிடபட்டுள்ளது.
தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் கே பாக்யராஜ். இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகராகவும் பல விருதுகளை வென்றுள்ளார். 75க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் 25 படங்களுக்கு மேல் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றிருந்தார் பாக்யராஜ். இவரது மனைவி பூர்ணிமா மற்றும் இவரது மகன் சந்தனு இருவருமே திரையுலக பிரபலங்கள் ஆவார். அதோடு இவரது மருமகள் கீர்த்தி பிரபல தொகுப்பாளனியாக வலம் வருபவர்.
இதற்கிடையே இவர் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவற்றின் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அந்த வகைகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்கி இருந்தார் கே பாக்யராஜ். நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும். கே பாக்யராஜ் தலைமைகள் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் அப்போது போட்டியிட்டனர். பின்னர் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அடுத்து தேர்தல் எண்ணிக்கையை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம் சங்க அலுவல்களை கவனிப்பதற்காக அரசு அதிகாரியையும் நியமித்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...சேலை சரிவதை தடுக்காமல் சொக்கி நிற்கும் ஜான்வி கபூர்...மயிலின் மகள் கொடுத்த கிக் போஸ்
இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி நடிகர் சங்க வாக்குகள் எஎண்ணப்பட்டன. அதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த நாசர், விஷால், கார்த்திக் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் சார்பில் கே பாக்யராஜுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...வேற லெவல் ட்ரெண்டா இருக்கே...அலங்கரா பொருளை ஆடையாக்கிய சாக்ஷி அகர்வால்...ஹாட் கிளிக்ஸ்
அதில், 'புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான, உண்மைக்கு புறமான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக பரப்பி வருகிறீர்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குழைக்கும் செயல்களை செய்துள்ளீர்கள். மேலும் சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்துள்ளீர்கள்.
மேலும் செய்திகளுக்கு... 4 ஆம் நிலை புற்றுநோயால் போராடும் KGF பட நடிகர்..! மருந்துக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் இத்தனை லட்சமா?
சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து செயற்குழு முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்திலிருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. இதற்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டிஸ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.