ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை.

சென்னை பசுமை வழி சாலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என ஏற்கனவே சொல்லிவிட்டேன். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை

இரு தரப்பையும் இணைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேலும் பலர் தன் பக்கம் வர உள்ளார்கள். அது யார் என்பது பரம ரகசியம். ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையை முழுமையாக படித்த பின்பு தான் கருத்து சொல்ல முடியும். கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன்’ என்று கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், ‘ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில்இடமில்லை. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பெட்டிப் பெட்டியாக பணம் வைத்துள்ளனர். அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிந்துள்ளது. பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.பணம் பாதாளம் வரை பாய்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது. ஆஸ்கரையே ஓ.பன்னீர்செல்வத்தின் நடிப்பு மிஞ்சிவிடும். அரசியலை விட்டு நடிப்புக்கு வந்திருந்தால் ரஜினி, சிவாஜியையே ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்திருப்பார். கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு இடம் இல்லை’ என்று கூறினார்.!

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !