விஸ்வாசம் என்றால் ஓபிஎஸ்.. கடைசிவரை தொண்டன்.. எடப்பாடி ஆட்சியில் சீர்கேடு - கடுப்பான ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Aiadmk o panneerselvam attack edappadi palanisamy at theni

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வாரத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  ஈபிஎஸ் தரப்பால் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார்.

ஐகோர்ட் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Aiadmk o panneerselvam attack edappadi palanisamy at theni

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், 'எந்த நோக்கத்திற்காக அதிமுக என்ற ஒரு பெரும் கழகத்தை, கட்சியை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா துவக்கினார்களோ அந்த கழகத்தை அவர்கள் வழி காட்டிய வழியில் நன்றாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வத்தோடு கழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கின்ற இந்த நேரத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகின்றது. 

இது ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதிமுக கழகத்தை உருவாக்கிய எம். ஜி.ஆர் 10 ஆண்டு காலங்களும் அதன் பின்னர் ஜெயலலிதா 16 ஆண்டுகளும் என 26 ஆண்டுகள் நல்லாட்சி நடத்திய நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் சீர்கேடானது. எனவே தமிழகத்தில் 30 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான். எனவே இந்த கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை தான்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Aiadmk o panneerselvam attack edappadi palanisamy at theni

இதுவரையில்  அம்மா அவர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்து அந்த பொறுப்பை திருப்பி என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக சரித்திரமே கிடையாது. அந்த அளவிற்கு நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்துள்ளேன்.  நான் முதலமைச்சராக வேண்டும் என்ற நிலையில் கூறவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றி ஆரம்பித்து கொடுத்த இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி செல்ல வேண்டும் என்றே கூறுகிறேன்' என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 2 நாட்கள் பிரியாணி கடைகள் மூட உத்தரவு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios