தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்..என்ன விஷயம் தெரியுமா?
பிரபல திரைப்பட தரவு இணையதளமான ஐ எம் டி பி இந்த படம் விமர்சன ரீதியில் எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்த படம் தான் லைகர். தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த பூரி ஜெகநாத் என்பவர்தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டேவும் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
எம் எம் ஏ வீரராக வேண்டும் என்கிற லட்சியத்தில் இருக்கும் நாயகன் எதிரிகளுடன் போராடி இறுதியில் தன் இலக்கை தொட்டாரா? என்பதே இந்த படத்தின் கதையாகும். இதில் அமெரிக்க குத்து சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...இது இல்லாவிட்டால் உடலுறவு முழுமை பெறாது...வெட்கப்படாமல் பதில் சொன்ன காஜோல்
இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் எங்கும் ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.
மேலும் செய்திகளுக்கு..ஒரு பக்க சேலையை சரியவிட்டு மனதை கலங்கடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி...
ஆனால் ட்ரைலர் பெற்ற வரவேற்பை கூட படம் பெறவில்லை. கலையான விமர்சனங்களையும் பெற்றது. விருவிருப்பில்லாத காட்சி அமைப்பு உள்ளிட்ட தொடர் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. இருந்தும் முதல் நாளில் 33 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றுவிட்டது.
ஆனால் இரண்டாம் நாளில் முதல் நாளை விட பாதி அளவு இதன் வசூல் குறைந்துவிட்டது. அதாவது இரண்டாம் நாளில் 16 கோடியை மட்டுமே படம் வசூலித்து இருந்தது. இந்நிலையில் பிரபல திரைப்பட தரவு இணையதளமான ஐ எம் டி பி இந்த படம் விமர்சன ரீதியில் எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்
the legend
அதன்படி பத்துக்கு 2.8 புள்ளிகளை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னதாக பிரபல தொழிலதிபரான சரவணன் அருள் நடிப்பில் வெளியாகியிருந்த தி லெஜன்ட் படத்திற்கு 5.3 புள்ளிகள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரேட்டிங்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.