Cobra : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இதில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இப்படத்தில் விக்ரமுடன் நடிகைகள் மிருணாளினி, மீனாட்சி, மியா ஜார்ஜ், நடிகர்கள் ரோஷன் மேத்யூ, கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் ராஜ், பூவையார் மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தம்பிக்கு வில்லனாகும் செல்வராகவன்? நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் இதோ!

Scroll to load tweet…

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பு செய்துள்ளார். கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தில் பல்வேறு கெட் அப்களிலும் நடித்துள்ளார் விக்ரம்.

இந்நிலையில் கோப்ரா படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இப்படம் 3 மணிநேரம் 3 நிமிடம் 3 செகண்ட் நிமிடம் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் கோப்ரா இவ்வளவு நேரம் ஓடக்கூடிய படமா என ஷாக் ஆகிப் போய் உள்ளனர். இப்படத்தின் முன்பதிவும் இன்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... சென்னை ஏர்போர்ட்டில் 7 மணிநேரம் காத்திருப்பு... டென்ஷன் ஆன இளையராஜா - என்ன காரணம் தெரியுமா?