சென்னை ஏர்போர்ட்டில் 7 மணிநேரம் காத்திருப்பு... டென்ஷன் ஆன இளையராஜா - என்ன காரணம் தெரியுமா?
Ilaiyaraaja : இசைக்கச்சேரியில் பங்கேற்பதற்காக ஹங்கேரி செல்ல இருந்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் 7 மணிநேரம் காத்திருந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
இசை உலகில் தனது இன்னிசையால் கடந்த 40 ஆண்டுகளாக மக்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. இவர் தற்போது சினிமாவில் இசையமைப்பதை குறைத்துக்கொண்டாலும், உலகமெங்கிலும் இசைக் கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக வெளிநாடுகளில் இவரது இசைக் கச்சேரிக்கு அதிக மவுசு உள்ளது.
அந்தவகையில் அடுத்ததாக ஹங்கேரி நாட்டில் இசைக் கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டு இருந்தார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு செல்ல இருந்தார் இளையராஜா. அவர் செல்ல இருந்த விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதற்காக அதிகாலையிலேயே விமான நிலையம் வந்தார் இளையராஜா.
இதையும் படியுங்கள்... வண்ண கலவையில் மின்னும் ரம்யா பாண்டியன்...ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் மனதை மயக்கும் போஸ்
ஆனால் சென்னையில் நள்ளிரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தரையிரங்க இருந்த விமானங்கள் சில பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
கனமழை காரணமாக இளையராஜா, துபாய் செல்ல இருந்த விமானமும் தாமதம் ஆனது. முதலில் 2 மணிநேரம் தாமதம் ஆகும் என கூறப்பட்டது. பின்னர் ரன்வேயில் மழைநீர் தேங்கி இருந்ததன் காரணமாக மேலும் 3 மணிநேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மேலும் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு 7 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சற்று டென்ஷனாகிவிட்டாராம் இளையராஜா. இதன்பின்னரே அவர் துபாய் சென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... ரசிகர்களின் ‘அந்த’ செயலால் போதைக்கு அடிமையானேன்... குடிகாரி ஆனதன் பகீர் பின்னணியை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை