ரசிகர்களின் ‘அந்த’ செயலால் போதைக்கு அடிமையானேன்... குடிகாரி ஆனதன் பகீர் பின்னணியை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை
tejaswi madivada : வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நடிகை தற்போது தான் போதைக்கு அடிமையானதற்கான காரணத்தை கூறி உள்ளார்.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தேஜஸ்வி மடிவாடா. இவர் தமிழிலும் நட்பதிகாரம் 79 என்கிற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது கமிட்மெண்ட் என்கிற தெலுங்கு திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை தேஜஸ்வி தான் போதைக்கு அடிமையானது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நடிகை தேஜஸ்வி மடிவாடா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் நடிகர் கவுஷல் என்பவரும் சக போட்டியாளராக பங்கேற்றார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து நடிகை தேஜஸ்வி மீது கவுஷலின் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதையும் படியுங்கள்... ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சி... புது விளக்கம் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால், தான் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக நடிகை தேஜஸ்வி தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டும் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகை தேஜஸ்வி மடிவாடா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர், தற்போது தான் போதைக்கு அடிமையானதன் காரணத்தை கூறி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... உடல் எடை கூடிய ஆலியா பட்... பேபி பம்ப் தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரன்பீருடன் கொடுத்த லேட்டஸ்ட் போஸ்!