ஜெயலலிதாவிற்கே உண்மையாக இல்லாதவர் ஓபிஎஸ்...! திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிக்க துடிக்கிறார்- இபிஎஸ் ஆவேசம்
போதுமான நிதியே இல்லாதபோது மெரினாவில் ரூ.80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா? என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரூ.80 கோடிக்கு 6.5 கோடி மக்களுக்கும் இலவசமாக பேனா வாங்கி கொடுத்து விடலாம் என தெரிவித்துள்ளார்.
திமுக கொண்டு வந்த திட்டம் என்ன..?
அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை திருச்சி வந்தடைந்தார். அப்போது அதிமுகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அருகே தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்தது. தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா பங்கு மக்களால் மறுக்கமுடியாது என்றார். ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 15 மாதங்கள் ஆகிறது. இத்தனை மாதங்களில் திருச்சியில் ஏதாவது திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்களா? அல்லது தமிழ்நாட்டில் யாவது புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்களா? என கேள்வி ஏழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை திமுக ஆட்சி அமைத்த பிறகு அவற்றை தொடங்கி வைத்து நாங்கள் தான் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என கூறுகிறார்கள் என விமர்சித்தார்.
திமுக தலைவராக 5ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின்...! அரசியல் களத்தில் சாதித்தது என்ன..?
தினமுப் போட்டோ ஷூட்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்றாடம் ஃபோட்டோ ஷூட் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றார். குறிப்பாக தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லை என தெரிவிகின்றனர். ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் 80 கோடியில் பேனா சிலை வைக்க வேண்டுமா? இந்த பணத்தில் ஆறரை கோடி பேர்களுக்கு பேனா வாங்கி கொடுத்து விடலாம். தலைவர்களின் நினைவாக சின்னம் வைக்க வேண்டாம் என கூறவில்லை ஆனால் 80 கோடி ரூபாய்க்கு வைக்க வேண்டுமா! 1 கோடியில் பேனா வையுங்கள் யார் வேண்டாம் என்றார் என தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு சொத்து வரி, மின்சார வரி, குடிநீர் வரி உயர்வு என மூன்று போனஸை மக்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் திடீர் தற்கொலை...! காரணம் என்ன..?
அதிமுகவை அழிக்க முயற்சி
சில பேர் அதிமுகவை கலைக்க பார்க்கிறார்கள் எந்த கொம்பனாலும் அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற திராவிட கழகத்தை தொட்டுப் பார்க்க கூட முடியாது என்றார். அதிமுகவில் ஜெயலலிதா மறைந்த பிறகு பிரச்சனை ஏற்பட்டபோது கட்சியின் இரண்டு பேரும் இணைந்து செயல்பட வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தெரிவித்தனர். அதன்படி இணைந்து செயல்பட்டு ஆட்சியை சிறப்பாக நடத்தபட்டது. ஆனால் தற்போது மீண்டும் வேதாளம் முருக மரம் ஏறுனது போன்று ஆகிவிட்டது என்றார். ஆனால் சிலர் திமுகவுடன் கை கோர்த்து அதிமுகவை அளிக்க முயற்சி செய்கிறார்கள் ஒருபோதும் நடக்காது என கூறினார்.
ஓபிஎஸ் உடன் இணைவதா..?
ஓபிஎஸ் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், அதிமுகவிற்கும் உண்மையாக இல்லை. திமுகவுடன் இணைந்து அதிமுகவை அளிக்க நினைக்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ரவுடிகள், குண்டர்களை காரில் அழைத்து வந்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினார். மேலும் ஆவணங்கள், சில முக்கிய பொருட்களை தீ வைத்து எரித்தார். இப்படி அதிமுகவிற்கு உண்மையாக இல்லாதவருடன் இணைய முடியுமா? முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஓபிஎஸ் ,திமுகவுடன் கூட்டணி போட்டுக்கொண்டு இந்த கட்சியை பிளவு படுத்த நினைக்கிறார். ஓபிஎஸ் மட்டுமல்ல அவரை போன்ற எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை ஆட்டி பார்கவோ, அசைக்கவோ முடியாது என தெரிவித்தார். மேலும் அதிமுகவை பாதுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்